ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153

எல்லைப் பாதுகாப்பை மேலும்
வலுப்படுத்த விசேட திட்டம்

வெளிநாடு செல்வோர் பற்றிய தகவல் அறியும் உளவுப் பிரிவொன்றையும், காணாமல் போன கடவுச்சீட்டுகள் பற்றிய புள்ளிவிபரங்களை இணையத்தளம் மூலம் கோவைப்படுத்துவதற்கான பிரிவொன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.இது நாட்டின் எல்லைப் பாதுகாப்பை அதிகரித்து, பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்காத ஒரு திட்டமாகும். இந்த இணையத்தளம் மூலம் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச பொலிஸ் ஸ்தாபனமான இன்டர்போலின் உலகளாவிய புள்ளி விபரங்களை பெற்று, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

விவரம் »

உற்பத்தி சந்தைப்படுத்தலை இலகுபடுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களில் புதிய 100 சந்தைப்படுத்தல் நிலையங்களை 2 வருடங்களுக்குள் நிறுவுவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ரிஸானாவுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க சகல தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்

சவுதி அரேபியாவில் மரணதண்டனைக் குள்ளாகியுள்ள ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்காக இந்நாட்டிலுள்ள சகல துறையினரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிப்பாக இந்நாட்டு உலமாக்கள் இது குறித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

விவரம் »

சனல் - 4: விஷமப் பிரசாரங்களால் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பில்லை

சனல் 4’ உட்பட அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் விஷமப் பிரசாரங்கள் நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்தைப் பாதிக்காது என பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் :

விவரம் »

சிகரட் பெட்டிகளில் புகைப்பிடித்தல் அபாயத்தை சித்தரிக்கும் படங்கள்

புகைப்பிடித்தலால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சித்தரிக்கக் கூடிய காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களின் பக்கட்டுகளில் பிரசுரிப்பதைக் கட்டாயப்படுத்தும் ஒழுங்கு விதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார். புகையிலைப் பாவனையிலிருந்து...

விவரம் »


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 500 விவசாயிகளுக்கு நேற்று நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக மட்டக்களப்புக்கு வருகைதந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அதிதிகள் வரவேற்று அழைத்து வரப்படுவதையும் வழங்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்களையும் படங்களில் காணலாம்.
(படம்: புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் நூர்தீன்)