ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153
 

இலங்கையுடனான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இலங்கையுடனான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ஜயசூரிய 2 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

பூவா - தலையா வென்ற இலங்கை அணி முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட செய்ய பணித்தது. துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி களம் இறங்கிய போது மழை பெய்ததால் ஆட்டம் 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனால் 32 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிஸ்வெட்டா 61 ஓட்டங்களும் மோர்கன் 45 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

230 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 27 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடக்க வீரர் டில்சான் (1), ஜயசூரிய (2), ஜயவர்தன (05), சங்கக்கார (4), மெண்டிஸ் (09), குலசேகர (05) ஆகியோர் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர்.

அதிகபட்சமாக மலிங்க 26 ஓட்டங்களுடனும், ரன்திவ் 24 ஓட்டங்களும் எடுத்தனர். கன்டம்பி 19 ஓட்டமும் மெத்தீவாஸ் 16 ஓட்டமும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அன்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுவான் 3, டொபஞ்ச் 2, பிர்ஸ்னன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அன்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி