ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 27
கர வருடம் ஆனி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JUNE 30, 2011
வரு. 79 இல. 153

சனல் 4 துர்ப்பிரசாரங்களை முறியடிக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறது

சனல் 4 துர்ப்பிரசாரங்களை முறியடிக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறது

30 ஆண்டுக்கும் அதிகமான பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகர மான முறையில் முடிவுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்து, அவர்களின் அடி ப்படை மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து, மீண்டும் நாட் டில் சமாதானத்தையும், அமைதியையும், சுபீட்சத்தையும் மக்களிடையே இன ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும், இணக்கப்பாட்டையும் ஏற் படுத்தி வெற்றிநடை போடும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத் தைப் பார்த்து, பொறாமைப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு தேசத்து ரோக சக்திகள் இன்று அரசாங்கத் தலைவர்கள் மீது போலியான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஜோடித்து அவர்களை குற்றவாளிகளா க்கி மின்சார கதிரையில் அமர்த்தி தண்டிப்பதற்கு எடுக்கப்படும் முய ற்சிகளை மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசாங்கமும் முறியடித்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருசிலரும், எல்.ரி.ரி.ஈ யின் வெளிநாட்டில் எஞ்சியிருக்கும் அங்கத்தவர்களும், தென்னிலங்கையிலுள்ள அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல் சக்திக ளும், இந்த அரச எதிர்ப்பு போலி நாடகத்தை இன்று சர்வதேச அர ங்கில் மேடையேற்றி இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியவாறு இருப்பது குறித்து அரசாங்கத்திற்கு இப்போது ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசாங்கம் இந்த போலி குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரபூர்வ மான தகவல்களை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டி, உண்மை நிலையை விளக்குவதற்காக தொலைக்காட்சி படப்பிடிப்புகளையும் முன்வைத்து, இரண்டு அறிக்கைகளை இப்போது தயாரித்துள்ளது.

இது பற்றி கடந்த செவ்வாயன்று பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளை சந்தித்த ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த தீயசக்திகள் தருஸ்மன் அறிக்கை சனல் 4 வீடியோ செய்திகள் மூலம் அரசாங்கத்தை வெளி நாடுகளில் மனித உரிமைகளைப் பறிக்கும் ஒரு கொடுங்கோல் அர சாங்கம் என்று பறைசாற்றுவதற்கு எடுத்த சதி முயற்சி சம்பந்தப்ப ட்ட எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்று கூறினார்.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அபிவிருத்தி பணிகளை சீராக மேற்கொண்டு வரும், பொறுப்புக்களை ஏற்றிருக் கும் மூவருக்கும் யுத்த முனையில் நாடு அடைந்த வெற்றியின் போது மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை என்பதை இன்று உலக அரங்கில் ஒரு ராஜதந்திரியாக எடுத்துரைத்து வரும் இளைப் பாறிய மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வாவையும் குறிபார்த்து இந்த சர்வதேச சதிகார கும்பல்கள் துர்பிரசாரத்தை மேற்கொண்டு வருவ தாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் தலைவன் என்ற முறையில் தன்னையும், பாதுகாப்பு செயலாளர் என்ற முறையில் கோத்தபாய ராஜபக்ஷவையும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் இந்த சதிகாரர்கள் தங்கள் பொய்ப்பிரசாரங்களின் மூலம் தாக்கி வருகிறார் கள் என்று கூறினார்.

சனல் 4 தொலைக்காட்சி சேவையை ஒரு செய்தி சேவையாக நாம் பார் க்கவோ அங்கீகரிக்கவோ முடியாது. அது வெறுமனே நடிகர்களை வைத்து, தொலைக்காட்சி படங்களை உருவாக்கி அதனை வெளியி ட்டு வரும் ஊடகத்துறையின் நற்பண்புகளை மீறி செயற்படுகிறது என்று ஜனாதிபதி அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.

சனல் 4 தொலைக்காட்சி கடைசியாக இலங்கை பற்றி வெளியிட்ட காட் சிகளை உன்னிப்பாக ஆராய்ந்த திரைப்பட தயாரிப்பில் நிபுணத்து வம் பெற்ற பலர் இக்காட்சிகள் ஜோடிக்கப்பட்டு சில நடிகர்களினால் நடிக்கப்பட்டவை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.

இதுபற்றி மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ ர்கள், ஒரு மனிதன் மீது எவராவது துப்பாக்கி பிரயோகம் செய்யும் போது அந்த மனிதன் நிலைதடுமாறி தரையில் விழுந்து துடிதுடித்து இறப்பதே உண்மையில் நடக்கக்கூடிய யதார்த்தபூர்வமான சம்பவங்க ளாகும்.

ஆனால், சனல் 4 தொலைக்காட்சி ஒரு மனிதன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்போது, அவன் தனது உடலில் காயம் ஏற்படாத வகையில், பாதுகாப்பான முறையில் தரையில் விழுவதை இந்த காட்சிகளை உன்னிப்பாக பார்ப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும். எனவே, இது நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட போலி தொலைக்காட்சி செய்தியறிக்கை என்பது ஊர்ஜிதமாகிறது என்று கூறினார்.

யுத்தத்தின் இறுதி நாட்களின்போது அரசாங்க தரப்புக்கு தப்பியோடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது எல்.ரி.ரி.ஈ யினர் துப்பாக்கி பிரயோகம் செய்து, படுகொலை செய்யும் காட்சிகளை விமானியி ன்றி யுத்தகளத்தின் மீது பறந்து சென்ற தன்னியக்க விமானத்திலிரு ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை தாம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து, காண்பித்தபோது அவர்கள் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் உண்மையான கொடுமைகளை புரிந்துகொண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்கள் என்று ஜனாதிபதி அவ ர்கள் மேலும் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய கொடுமை வாய்ந்த பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈ யின் கொட்டத்தை அடக்கிய அரசாங்கத்திற்கு இன்றைய சர்வதேச துர்ப்பிரசாரங்களையும், அழுத்தங்களையும் மிக இலகு வில் மதிநுட்பத்துடன் சாதுரியமாக செயற்பட்டு அடக்கிவிடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி