வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

புதுடில்லியில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது

புதுடில்லியில் பொதுநலவாய
விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது

பல்வேறு சர்ச்சைகளை கடந்து பொதுநலவாய போட்டி தலைநகர் டில்லியில் ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பதால் இந்தியா அதிக பதக்கம் கைப்பற்றி சாதிக்க காத்திருக்கிறது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஆபிரிக்க அணிகளும் களமிறங்குவதால், உலக விளையாட்டு நட்சத்திரங்களின் ஆக்ரோஷ ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தடகளம், நீச்சல், பளு தூக்குதல் போன்ற போட்டி களில் புதிய சாதனைகள் படைக்கப் படலாம்.

பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் பொதுநலவாய போட்டி முதல் முறையாக டில்லியில் நடக்கிறது.

தற்போதைய 19வது போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8,500 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்கின் றனர்.

கடந்த 1982ல் நடந்த ஆசிய போட்டிக்கு பின் இந்தியாவில் நடக்கும் மிகப்பெரும் விளையாட்டு திருவிழா என்பதால் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட் டது. ஆனால் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில் பெரும் ஊழல், ஜவகர்லால் நேரு மைதா னத்தின் மேற்கூரை மற்றும் நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. அசுத்தமான விளையாட்டு கிராமம், சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம் போன்றவை பின்னடைவை ஏற்படுத்தியது.

இப்பிரச் சினைகளில் இருந்து ஒரு வழியாக மீண்ட நிலையில் தற்போது போட்டிகள் வெற்றி கரமாக நடக் கின்றன.

இம்முறை இந்தியா சார்பில் மிக அதிக பட்ச மாக சுமார் 495 பேர் அடங்கிய குழு பங்கேற்கிறது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா (325), தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதிகமான வீரர், வீராங்கனைகளை டில்லிக்கு அனுப்பியுள் ளது.

பாகிஸ்தான், இலங்கை சார்பில் தலா 125 பேர் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் தங்க நாயகன் அபினவ் பிந்த்ரா, உலக சம்பியன் தேஜஸ்வனி சாவந்த் மீது அதிக நம்பிக்கை காணப்படுகிறது.

இவர்கள் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று தரலாம். இதேபோல ஒலிம்பிக் சாதனையாளர்களான விஜேந்தர் குத்துச் சண்டை, சுஷில் குமார் (மல்யுத்தம்) பதக்கம் பெற காத்திருக்கின் றனர்.

இருவரும் சூப்பர் பார்மில் இருப்பதால் சாதிக்க அதிக வாய்ப்பு உண்டு. பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவல் கலக்கலாம். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜுவாலா - திஜு ஜோடி சாதிக்கலாம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»