வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

ஈரானின் அணு உலைகள், கணனித் தகவல்களை உளவு பார்த்தோர் கைது: பாதுகாப்பு தீவிரம்

ஈரானின் அணு உலைகள், கணனித் தகவல்களை
உளவு பார்த்தோர் கைது: பாதுகாப்பு தீவிரம்
 

ஈரானின் அணுநிலையங்கள், கண னித் தகவல்கள் சம்பந்தமாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகிக்கப் படும் பலரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ளது. சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் வேலைகள், அணு உலைகள், கணனித் தகவல்கள் சம்பந்தமான தகவல்களை மேற்குலக நாடுகளுக்கு வழங்கும் பொருட்டு அவர்கள் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

அணு உலைகள் தொடர்பான தகவல்களைப் பேணும் கணனிகளில் வைரஸ்களைப் பரப்பி இவ் வேலை களில் தடங்கல்களை உண்டு பண் ணுவதே இவர்களின் நோக்கமாகும். இவ்வாறான வேலைகளில் இந்த உளவாளிகள் ஈடுபட்டதால் சில கணனிகளில் வைரஸ் தொற்றிக் கொண்டன. ஆனால் இவை பொது வான வேலைகளுக்கு எவ்வித பாதி ப்புக்களையும் ஏற்படுத்தவில்லை.

தனிநபர் செயற்பாடுகளையே பாதி த்துள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. கைதானோரின் விபரங்களையோ, ஏனைய தகவ ல்கள் எதுவுமோ வெளியிடப்பட வில்லை. காம் புஷ்ஹர் போன்ற அணு உலைகள் அமைந்துள்ள பிர தேசங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரானின் அணு விஞ்ஞான தகவல் நிலையத்தின் பொறுப்பாளர் இது தொடர்பாகக் கூறியதாவது :

நாங்கள் இத்துறையில் பலகால மாக இன்னல்கள், தடங்கல்களை எதிர்கொள்கின்றோம். எமது வளர் ச்சியை முறியடிக்க மேற்கு நாடுகள் முனையும் வழிகளே இவை. இதனால் எங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றார். யுரேனி யம் செறிவூட்டல் விடயம் தொடர் பாக ஈரான் அமெரிக்காவிடையே நீண்டு செல்லும் முரண்பாடுகள் இன்னும் முடிந்தபாடில்லை.

இத னால் ஐ.நா. மூலம் ஈரானுக்குப் பல வகையான பொருளாதாரத் தடை கள் கொண்டுவரப்பட்டன. இதை யும் மீறி ஈரான் அணு யுரேனியம் வேலைகளைத் தொடர்கின்றது. ஈரா னின் விஞ்ஞானிகள், அணு உலை களில் பணியாற்றுவோர், பொறியி யலாளர்கள், யுரேனியம் செறிவூட் டல் நிலையங்கள் உள்ளிட்ட அனை த்து தகவல்களையும் அமெரிக்கா சேமித்துள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லும் ஈரான் விஞ்ஞானிகள் கட த்தப்படுவதும், ஈரானின் கணனிகள் மீது வைரஸ்களை விடுவதும் மேற் குலகம் மேற்கொள்ளும் அழுத்தங் கள்.

இதை முறியடித்து நாங்கள் தொடர் ந்தும் எமது பாதையில் பயணிப் போம் என ஈரான் கூறியது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»