வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

உலக சிறுவர் தினத்தையொட்டிய நிகழ்வு நேற்று அநுராதபுரத்தில் நடந்தது. அநுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடந்த இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிறுவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்கின்றனர்.
(படம் : சுதத் மலவீர) (ரு - து)
 


Send money to Sri Lanka - www.timesofmoney.com


பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் - குறள் 979
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.



Advertisments






 
நாடெங்கும் அடைமழை, வெள்ளம்;
ஆறுகள் பெருக்கெடுப்பு மண்சரிவு அச்சம் மக்கள் வெளியேற்றம்
3 பலி

நாடெங்கிலும் நேற்றும் பரவலாக மழை பெய்துள்ளது. ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக குக்குலே கங்கையில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.இன்று முதல் பெய்யும் மழையின் அளவு குறைவடைய முடியுமென எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி பொலன்னறுவையில் 117.9 மி.மீ. மதுகமவில் 108.3 மி.மீ. மன்னாரில் 66.4 மி.மீ என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவரம் »
 

வடக்கில் 500 கிராமங்கள் அபிவிருத்தி; ரூ. 200 கோடியில் வேலைத் திட்டம்

வட மாகாணத்திலுள்ள 500 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கென 200 கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாடு (NELSIP)  திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடு க்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கென 200 கோடி ரூபாவை உலக வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்கியுள்ளது என்றார்.

விவரம் »
 


இலங்கையை தொட்டுச் சென்ற குள்ளமும் உயரமும்

உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இலங்கை வந்தனர். மலேஷியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் விசேட விருத்தினர்களாக பங்குபற்றிய பின்னர் தமது சொந்த நாட்டுக்குச் செல் லும் வழியிலேயே அவர்கள் இலங்கை வந்திருந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர்.உலகில் உயரமான மனிதரான ஹக் நவாஸ் 7 அடி 8 அங்குலம் உயரமானவர். அவருக்கு 2 சகோதரர்களும் இரு சகோதரிகளும் உள்ளனர்.

விவரம் »
 


‘என்னை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கம்’

ஜனாதிபதி

“நாட்டை முழுமையாக மீட்டு ஐக்கியத் தில் கட்டியெழுப்பிவரும் நிலையில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கமாகவுள்ளது.” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி, நிறம் என பேதம் பார்ப்பதில்லை.வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றோம்.

விவரம் »