வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

கொமன்வெல்த் போட்டிகள் டில்லியில் கோலாகல ஆரம்பம்

கொமன்வெல்த் போட்டிகள் டில்லியில் கோலாகல ஆரம்பம்

இளவரசர் சார்ல்ஸ¤ம், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் தொடக்கி வைத்தனர்.

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் டில்லியில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டியை ஜனாதிபதி பிரதீபா பட்டீலும், இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ¤ம் தொடங்கி வைத்தனர்.

இதையொட்டி டில்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை 2010ம் ஆண்டு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றதிலிருந்தே டில்லியில் அதற்கான காற்று வீசத் தொடங்கிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இதற்கான பணிகள் வேகம் பெற்றன.

எனினும் கடந்த மாதம் போட்டி தொடர்பாக ஏற்பட்ட ஊழல் புகார்கள், பணிகளில் தரமின்மை, பாலங்கள் உடைந்த விவகாரம், விளையாட்டு கிராமத்தில் சுகாதாரமின்மை ஆகியவற்றால் கொமன்வெல்த் போட்டி சிறப்பாக நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது பின்னர், பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டன.

இந்த நிலையில் கொமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

14ம் திகதி வரை நடக்க உள்ள இந்தப் போடியின் தொடக்க மற்றும் நிறைவு விழா ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடக்கிறது. போட்டியை இரவு 7 மணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ¤ம் தொடக்கி வைத்தனர்.

போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திலிருந்து ஜோதி கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதி பட்டீலிடமும் இளவரசர் சார்ல்ஸிடமும் வழங்கப்பட்டது. அதன்பின் ஜோதி ஏற்றப்பட்டது. வழக்கமாக கொமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து ராணிதான் தொடக்கி வைப்பார்.

இம்முறை ராணி வரமுடியாததால் இளவரசர் சார்ல்ஸ் வந்துள்ளார். ஆனால் முதல் முறையாக கொமன்வெல்த் போட்டியை 2 பேர் சேர்ந்து தொடக்கி வைத்தனர்.

இந்தப்போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா உட்பட 71 நாடுகளின் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் கலந்துகொண்ட அணிவகுப்பு நடந்தது. அதன்பின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று முதல் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.

பாதுகாப்பு

கொமல்வெல்த் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை கடந்த 2மாதத்துக்கு முன்பே எச்சரித்தது.

மேலும் கொமன்வெல்த் போடியின்போது டில்லியில் தாக்குதல் நடத்தி, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள நற்பெயரை கெடுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் எச்சரித்தது.

இதையடுத்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டன. போட்டிகள் நடக்கும் 11 இடங்கள், விளையாட்டு கிராமம், வீரர்கள் செல்லும் பாதைகள், அவர்களை அழைத்துச் செல்லும் பஸ்கள் என எல்லாவற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதைத்தவிர டில்லியில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள் ளனர்.

இதற்காக டில்லியில் பொலிஸார் எல்லாருக்கும் 15 நாட்கள் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கொமல்வெல்த் போட்டி முடியும் வரை பொலிஸார் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் விளையாட்டு போட்டியை தொடக்கி வைப்பதற்காக இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ், மனைவி கமிலா ஆகியோர் டில்லிக்கு நேற்று வந்தனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்த்த சார்ல்ஸ் தம்பதியினர், அங்குள்ள முகலாயர் தோட்டத்தை பார்த்து அதிசயித்தனர். சார்ல்ஸ் தம்பதிக்கு சமோசா, அன்னாசிப் பழத்தில் செய்யப்பட்ட அல்வா ஆகியவற்றை ஜனாதிபதி பிரதிபா பட்டீல் வழங்கினார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»