வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

இராணி கிண்ண கிரிக்கெட்

இராணி கிண்ண கிரிக்கெட்

ரெஸ்ட் ஆப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் மும்பை அணிகள் இடையிலான இராணி கோப்பை கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. முதல் நாளில் ஒரு விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்திருந்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 2வது நாளன்று தொடர்ந்து விளையாடி முதல் இன்னிங்ஸில் 668 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அபினவ் முகுந்த் 161 ஓட்டங்களும், பத்ரிநாத் 94 ஓட்டங்களும், விராட் கோக்லி 90 ஓட்டங்களும், பார்த்தீவ் பட்டேல் 125 ஓட்டங்களும், அஷ்வின் 73 ஓட்டங்களும் விளாசினர். கெப்டன் யுவராஜ்சிங் 4 ஓட்டங்களில் போல்டு ஆனார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்கள் எடுத்திருந்தது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»