வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

யாழ். மாவட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம்

யாழ். மாவட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம்

தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள யாழ். மாவட்ட வீர வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 15ம் 16ம் 17ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. வட மாகாண விளையாட் டுத் திணைக்களம் வட மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் மேற்கொண்டுள்ள இந்த பயிற்சி முகாமில் தேசிய மட்டத்திலான பயிற்றுனர்கள் யாழ் மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளார்கள்.

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்தின் பின்னர் இத்தகைய பயிற்சி முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ். மாவட்ட வீர வீராங்கனைகள் கூடிய பலனைப் பெறக் கூடியதாக இருக்கின்றது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»