வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

குருநாகலில் அதிகாலை லொறி - வான் விபத்து;ஏழு பேர் மரணம்

குருநாகலில் அதிகாலை லொறி - வான் விபத்து;ஏழு பேர் மரணம்

குருநாகலயில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்துடன், பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

குருநாகல் - தம்புள்ள பிரதான வீதியில் சென்றுக் கொண்டிருந்த வானுடன் லொறி நேருக்கு நேர் மோதியதிலேயே நேற்று அதிகாலை 2.10 மணியளில் தெதுறுஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு வயது குழந்தை, நான்கு மற்றும் ஏழுவயது சிறார்கள். இளம் தம்பதியினரும் அடங்குவர்.

குருநாகல் உஹ¤மீய்யா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் சென்று திரும்பிக் கொண்டு இருக்கும் போது மட்டக்களப்பிலிருந்து உரங்களை ஏற்றி வந்து கொண்டிருந்த லொறி வேகமாக வந்து மோதியதிலேயே இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஏழு பேர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கண்டி மற்றும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆபத்தான நிலையிலுள்ள மூவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திரானி குமார் 2 வயது குழந்தை, பசிந்து தில்ஷான் குமார 6 வயது, திலக் சுசந்த 23 வயது, அவரது மனைவி செளமியா இந்திராணி 22 வயது, அவர்களது குழந்தையான நான்கு வயதுடைய மல்ஷா மிஹிந்து மற்றும் 70 வயதுடைய எம்.டி.எக்னஸ் ஆகிய ஏழு பேருமே கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •