வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் தெரிவித்தார்.

இப்போட்டிகள் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருந்தன.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் இப்போட்டிகள் ஜுலை மாதம் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்ந்த அனைவருக்கும் அறிவிப்பதாக பணிப்பாளர் நிரலையம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இப்போட்டிகளுக்கு பிரதமவிருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •