வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

முதல்வர் கருணாநிதி முடிவுரை;10 இலட்சம் பேர் பங்கேற்பு

செம்மொழி மாநாடு நேற்று நிறைவு:

முதல்வர் கருணாநிதி முடிவுரை;10 இலட்சம் பேர் பங்கேற்பு

தமிழகத்தின் கோவை நகரில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நேற்று வெற்றிகரமாக நிறைவுற்றது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பத்து இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டின் இறுதி நாள் அமர்வு இந்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த அமர்வில் மாநாட்டின் நிறைவுரையை தமிழக முதல்வர் மு. கருணாநிதி நிகழ்த்தினார்.

மாநாட்டையொட்டிய சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டுவைத்ததுடன் முதலாவது முத்திரையை முதலமைச்சர் மு.கருணாநிதி பெற்றுக் கொண்டார். முதல்வர் மு. கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஆ.ராசா தமிழக துணை முதல் வர் மு.க. ஸ்டாலின் போன்றோருக்கு மாநாட்டு மேடையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நேற்றைய பொது அரங்க நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர் சிவகுமார் தலைமையில் கருத்தரங்கம் இடம்பெற்றது. “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் பேராசிரியர் வீரபாண் டியன் தொடக்கவுரையாற்றியதுடன் பீட்டர் அல்போன்ஸ், அருட்தந்தை மா. ஜெகத்கஸ்பர், பேராசிரியர் பர்வீன் சுல் தானா, வழக்கறிஞர்கள் ராமலிங்கம், அருள்மொழி கம்பம் பெ.செல்வேந்திரன் உட்பட பலர் உரையாற்றினர்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த புதன்கிழமை காலை கோலா கலமாக ஆரம்பமாகியது. மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடக்கிவைத்தார். முதல்வர் மு.கருணாநிதி தலைமை வகித்ததுடன் முதல் நாளன்று மாலை நடைபெற்ற பிர மாண்ட பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

2வது நாள் நிகழ்வாக ஆய்வரங்கம் தொடக்கிவைக்கப்பட்டதுடன் இதில் வெளிநாட்டு தமிழறிஞர்கள் கா.சிவத்தம்பி (இலங்கை), ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), அஸ்கோ பர்ப்போலா (பின்லாந்து), அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா), உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனி) உட்பட 1000க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

3ம் நாள் நடைபெற்ற “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்னும் கருத்தரங்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா இல.கணேசன், தொல். திருமாவளவன் கி.வீரமணி, இராம. வீரப்பன், காதர்மொகிதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நேற்றைய நிகழ்ச்சிகளில் காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அதனை தொடக்கி வைத்கிறார்.

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மத் திய தகவல் தொழில்நுட்பத்துறை அமை ச்சர் ஆ.ராசா, செம்மொழி மாநாட்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கி யவர்களுக்கு கணியன் பூங்குன்றனார் விருதுகளை வழங்கியதுடன் முதல்வர் கருணாநிதி நிறைவுரையை நிகழ்த்தினர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •