வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

சமபோஷ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்

சமபோஷ வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்

புத்தளம் நகர இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், உதைபந்தாட்ட வளர்ச்சியை கருத்தில்கொண்டு சமபோஷ வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டித் தொடர் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனமும், பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனமும் இணைந்து புத்தளம் பிராந்தியத்துக்குட்பட்ட பாடசாலைகளின் 13 வயதுக்குட்பட்டவர்களுக்காக இத்தொடரை நடாத்தின.

முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று நொக்அவுட் முறையிலும் நடைபெற்ற இத்தொடரில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, ஸாஹிரா கனிஷ்ட பாடசாலை, மணல்குன்று அல்-அஷ்ரக் மு.ம.வி., கல்பிட்டி அல்-அக்ஷா தேசிய பாடசாலை, புளிச்சாங்குளம் உமர் பாறுக் மு.ம.வி., தில்லையடி மு.ம.வி., முள்ளிபுரம் அசன்குத்தூஸ் மு.ம.வி., கண்டக்குழி மு.ம.வி. மற்றும் கரைத்தீவு பொண்பரப்பி மு.ம.வி. ஆகிய ஒன்பது அணிகள் பங்கேற்றன. (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •