வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

உதைபந்தாட்டம்

உதைபந்தாட்டம்

22வது பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவினையொட்டி கோறளைப்பற்று மத்தி பிரதேச இளைஞர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை சமூக சேவைகள் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கோல்ட் ஸ்ட்டார் இளைஞர் கழகத்திற்கும், சமூக சேவைகள் இளைஞர் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4:1 என்ற அடிப்படையில் வாழைச்சேனை சமூக சேவைகள் அணி வெற்றிபெற்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் அணி முதலாமிடத்தையும் வெல்லாவெளிப் பிரதேசம் இரண்டாமிடத்தினையும் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான எல்லேப் போட்டியின் ஆண்கள் பிரிவில் மண்முனைப்பற்று முதலாமிடத்தினையும், களுவாஞ்சிகுடி பிரதேசம் இரண்டாவது இடத்தினையும் பெற்றது.

பெண்களுக்கான எல்லேப் போட்டியில் செங்கலடி பிரதேசம் முதலாமிடத்தையும், வெல்லாவெளிப் பிரதேசம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான குழுப் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள மைதானங்களில் நடைபெற்றன. (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •