வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

உதைபந்தாட்ட தொடரில் சாஹிரா தேசியக் கல்லூரி சம்பியன்

உதைபந்தாட்ட தொடரில் சாஹிரா தேசியக் கல்லூரி சம்பியன்

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கமும் இலங்கை உதைபந்தாட்ட சம் மேளனமும் இணைந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (27) நடாத்திய அம்பாறை மாவட்ட பாடசாலை களுக்கிடையிலான சமபோஷ 13 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா, மருதமுனை ஸம்ஸ், கல்முனை அல் அஸ்ஹர், சாய்ந்தமருது அல் ஜலால், கல்முனை அல் மிஸ்பா, கல்முனை அல் பஹ்ரியா, அம்பாறை சத்தாதிஸ்ஸ, மாவ டிப்பள்ளி அல் அஷ்றப் ஆகிய பாட சாலைகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் கல்முனை சாஹிரா அணி மருதமுனை ஸம்ஸ் அணியை (1-0) என்ற கோல் அடிப்படையில் தோற்கடித்தது (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •