வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

நாளை அரச, வங்கி விடுமுறை

நாளை அரச, வங்கி விடுமுறை

ஜனாதிபதித் தேர்தலையொட்டி நாளை 27ம் திகதி புதன் கிழமை அரச மற்றும் வங்கி விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டதுடன், தனியார் துறையினருக்கும் 27ம் திகதி விடுமுறை வழங்குமாறு தொழிலமைச்சர் அதாவுத செனவிரத்ன கம்பனி உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கு வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக அமைச்சர் அதாவுத செனவிரட்ன நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். (ஸ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •