வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010


நாட்டு மக்களின் இன்றைய கடமை

நாட்டு மக்களின் இன்றைய கடமை

ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு சுமுகமாக நடைபெறுவதையும் வன்முறை எதுவும் தலை தூக்காதிருப்பதையும் உறுதிப்படுத்தவென கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீணான தாமதத்துக்கு இடமளிக்காமல் நேரகாலத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பதே இன்றைய தினத்தில் வாக் காளர்களின் பொறுப்பாகும். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் மோசடிகள், முறைகேடுகள் இடம்பெறுவதை பெருமள வில் தவிர்த்துக் கொள்ள முடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதேசமயம் வன்முறைச் சம்பவம் எதுவும் இடம்பெறுமாக இரு ந்தால் அச்சம்பவங்களிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற் றிக் கொள்ளவும் இதன் மூலம் வழியேற்படும். எனவேதான் நேரகாலத்துடனான வாக்களிப்பு மிகவும் உகந்ததென தேர்தல் கள் செயலகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டுமென்பதே அமைதியை யும் சமாதானத்தையும் விரும்புகின்ற மக்களின் எதிர்பார்ப்பா கும். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பைக் குழப்புகின்ற கார ணியாக வன்முறைச் சம்பவம் மாத்திரமன்றி வீணான வதந்தி யும் விளங்குகிறது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நாட்டில் பரவலாக கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் பொய்வதந்திகளை நாமறிவோம். வதந்திகள் மூலம் மக்கள் குழப்பத்துக்குள்ளாகு கின்றனர். மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் வதந்திகள் வழிவகுக்கின்றன.

இன்றைய தேர்தலின் போதும் வீணான வதந்திகள் கட்டவிழ்த்து விடப்படலாம். எந்தவிதமான ஆதாரமற்ற தகவலையும் மக் கள் எழுந்தமானமாக நம்பி விடலாகாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள பெரும் உரிமை ஆகும். அந்த உரிமையை ஒவ்வொரு வாக்காளரும் பயன்படுத்து வதே அவருக்குரிய கடமையாகும். தேர்தலில் வாக்களிப்ப தன் மூலமே ஜனநாயக உரிமையை வாக்காளர்கள் பாதுகாத் துக் கொள்ள முடியும்.

இருபத்திரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் நடைபெறும் இன் றைய தேர்தலில் வாக்களிப்பதற்கென 14,088,500 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் 11,098 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வன் னியில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கென 209 வாக் களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்களிடம் வாக்காளர் அட்டை இல் லாது போனாலும் அவர்கள் வாக்களிக்க முடியும். தேசிய அடை யாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன சாரதி லைசென்ஸ் அல் லது தேர்தல்கள் செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேறேதும் ஆவணத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்றால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள் வர். குறித்த வாக்காளரின் பெயர் வாக்காளர் இடாப்பில் காண ப்படுமாயின் அவர் வாக்களிப்பதற்கு இடமளிக்கப்படுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் எதுவிதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியக் கூடா தென்பதே பொதுவான கோரிக்கையாகும். வன்முறையில் ஈடு படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படுமென பொலிஸ் திணைக்களம் எச்சரித்துள்ளது. வன்முறையில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இன் றைய தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளாகும்.

தேர்தல் பாதுகாப்புக் கடமையில் 68,800 பொலிஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக முப்படையினரும் கட மையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடமாடும் பாதுகாப்புக் குழு க்களும் இன்றைய தினம் கடமையில் ஈடுபட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் அப்பால் தேர்தல் கண்காணிப்புப் பணியில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 35 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வன்முறை சம்பவங்கள் இம் முறை சற்று அதிகமாக இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாள ர்கள் கவலை வெளியிட்டிருந்தனர். எனினும் வன்முறைச் சம் பவங்கள் நேற்று ஓரளவு ஓய்ந்திருந்தன.

இன்றைய தேர்தலில் அமைதி, சமாதானம் விரும்பும் மக்களின் ஒரே வேண்டுகோள் இதுதான்.

‘தேர்தல் என்பது ஜனநாயக மார்க்கம். வன்முறைகளால் ஜனநாய கம் சிதைந்து விடலாகாது!’

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி