வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009


வென்னப்புவ, சென் ஜோசப் வாஸ் கல்லூரியின் வைர விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கல்லூரி அதிபர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்த போது பிடிக்கப்பட்ட படம்.
(படப்பிடிப்பு : சன்ஜித் ஜயவீர) (ரு – து)

 

ஐ.தே.கவின் வாக்கு வங்கி 20 இலட்சத்தினால் வீழ்ச்சி

ஐ.ம.சு.மு பொதுத் தேர்தலிலும் 2/3 பெரும்பான்மை பலம் பெறும்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

கடந்த நான்கு வருட காலத்தில் ஐ. தே. க.வின் வாக்கு வங்கி 20 இலட்சம் வாக்குகளினால் குறைந்து ள்ளது. ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க. வைவிட 25 ஆயிரம் மேலதிக வாக் குகளை பெற்றுள்ளது. தென் மாகாண சபைத் தேர்தலைப் போன்றே எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ. ம. சு. முன்னணி 2/3 பெரும்பான்மை பலத்தை பெறும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,  . . . . . .

விவரம் »
 

தமிழ்க் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றம்

பாதுகாப்பு அமைச்சில் நடந்த விசேட கூட்டத்தில் தீர்மானம் 10 சட்டத்தரணிகளை நியமித்து செயற்பட முடிவு

சிறைகளில் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ்க் கைதிகள் தொடர்பாகத் துரிதமாக விசாரணை நடத்தவென விசேட நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் நேற்று (14) தீர்மானித்துள்ளது. கைதிகளின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு விரைவில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இந்த நீதிமன்றம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

விவரம் »
 

இந்திய கைதிகள் குறித்து தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் ஆராய்வு

தமிழகப் பாராளுமன்றக் குழுவினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடை யிலான சந்திப்பின் போது, இலங்கைச் சிறைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல் திருமாவளவன் தினகரனுக்குத் தெரிவித்தார். இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள இந்தியப் பிரஜைகளை, இந் தியச் சிறைகளுக்கு மாற்றுமாறும், அவ்வாறு மாற்றினால், அவர்கள் தொடர்பான வழக்கை இந்தியாவில் நடத்த முடியுமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகத் திருமாவளவன் தெரிவித்தார்.

விவரம் »