வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

தேர்தல் ஆணையாளர் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது

தேர்தல் ஆணையாளர் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது

தேர்தல் முடிவில் சந்தேகமில்லை

அமைச்சர் சுசில்

தேர்தல் ஆணையாளர் குறித்து ஐ. ம. சு. முன்னணிக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும் தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளை பூரணமாக ஏற்றுக் கொள்வதாகவும் ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமை ச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவி க்கையியே அமைச்சர் மேற்கண்ட வாறு கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்க ளின் விருப்பு வாக்குகள் எண்ணு வதில் முறைகேடுகள் இடம்பெற் றதாக காலி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிசாந்த முதுஹெட்டிகம குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறிய தாவது,

ஆரம்ப முதலே தேர்தல் ஆணையாளர் சுதந்திரமான தேர்தலை நடத்த அர்ப் பணிப்புடன் செயற்பட்டார். அவர் குறித்து எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது. தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் எமக்கு எதுவித சந்தேகமும் கிடையாது.

எமது கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கோ வேறு வேட்பா ளர்களுக்கோ விருப்பு வாக்கு முடிவுகள் தொடர்பில் திருப்தி இல்லாவிடின் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

சில வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணப்படும் முறை குறித்து தெரியாமல் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். முறையான அடிப்படை யிலே வாக்குகள் மற்றும் விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணப்படுவதில் எதுவித முறைகேடும் இடம்பெறவில்லை என்றார். (ரு-ஞ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •