வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

கவலைப்படுவதை விடுத்து தேவனைப் பற்றிக ;கொள்வோம!;

கவலைப்படுவதை விடுத்து தேவனைப் பற்றிக ;கொள்வோம!;

நம் முன்னோர்களை உதாரணமாக்குவோம்

“நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப் பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்திலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி4:6).

இன்றைக்கு மனிதனை வாட்டி எடுக்கும் கவலை அவனை ஒன்று மில்லாத வனாக்கி நடைபிணளமாக மாற்றுகின்றது. கவலை அவன் சரீரத்தை சந்தோஷத்தை, சமாதா னத்தை அழித்து விடுகின்றது. ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லா வற்றையும் தேவனுக்கு தெரிய ப்படுத்துங்கள் என்று வேதாகமம் கூறுகிறது.

ஜெபம் என்பது ஒரு வழித் தொடர்பல்ல, அது இருவழித் தொடர்பு. இருவர் பேசுவதை உரையாடல் என்கிறோம்.

“காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்” (சங் 5:3) என்று தாவீது ராஜா கூறுகிறார். ஜெபத்தின் மேன்மை தேவனோடு இனிய ஐக்கியம் கொள் ளுதலாகும். இப்படியிருக்கும் போது ஏன் நாம் வீணாக கவலைப்பட வேண்டும்.

தேவனோடு, ஐக்கிய மாய் நெருங்கி இருப்போமானால், தேவனும் நம்மோடு இணைந்து நாம் அவருடைய நாம த்தினாலே எதையெல்லாம் ஜெபத் திலும், வேண்டுதலினாலும் தெரியப்படுத்து கிறோமோ, அதை நிறை வேற்ற தேவன் வல்லவராயிருக்கிறார்.

அநேகருடைய ஜெபம் வெறும் வாய் வார்த்தைகள் மாத்திரம்தான். ஜெபிப்பார்கள் விசுவாசமிருப்பதில்லை. “ஜெபத்திற்கு பதிலளிப்பேன்” என்று கர்த்தர் எத்தனையோ வாக்குத் தத் தங்களை நமக்கு கொடுத்திருக்கிறார். நமது ஜெபமோ கேட்கபடாததின் காரணம் அவிசுவாசமாகும்.

வேத த்திலே எத்தனையோ பரிசுத்தவான் கள் விசுவாசத் தோடு ஜெபித்து சூரியனையும், சந்திரனையும், மழை யையும் நிறுத்தி வைத்ததாக பார்க்கிறோம். தாவீது விசுவா சத்தோடு ஊக்கமாக ஜெபித்த தினால், புதிய பெலனை தரித்தவ னாய் கரடியை, எதிர்த்து நின்றான்.

சிங்கத்தின் வாயை கிழித்தான், கோலியாத்தை ஒரே கூலாங் கல்லை கொண்டு முறியடித் தான். எங்களுடைய விசுவாசம் எப்ப டிப்பட்ட தாய் இருக்கின்றது.

வருடக் கணக்கிலே ஜெபிக் கின்றோம். ஒரு பதிலுமே இல்லை. மக்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் போது நாமோ எவ்வே ளையிலும், இல்லை, முடி யாது என்று அவிசுவாசமான வார்த்தை களை அறிக்கையிட அது பலன ற்றதாகி விடுகின்றது.

தேவன் உண்டென்றுவிசுவாசிக்கி றோம். கிரியையில்லை. “வீணான மனு ஷனே, கிரியைகளில்லாத விசு வாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?” (யாக்ச: 20) கிரியை இல்லாவிட்டால் விசு வாசம் செயல்பட முடியாது. அது பூரண படவும் மாட்டாது.

விசுவாசமில்லாத இடத்தில் தான் பயமும் கவலையும் வருவ துண்டு. ஒரு மனிதன் தேவன் உண்டு என்று அவர் பேரில் விசுவாசம் வைத்து ஜெபிப்பா னாகில் நிச்சயம் பதில் கிடைக் கும் அன்று தாவீது, தானியேல், சாத்ராக்மேஷாக், ஆபேத்நேகோ, எலியா போன்ற தேவமனிதர்கள் அரும் பெரும் சாதனைகளை செய்ய முன்வந்தார்கள்.

தேவ னும் அவர்களோடு கூட இணை ந்து செயல்பட்டார். மாபெரும் வெற்றி கண்டார்கள். ஆகையால் கவலைப் படுவதை விட்டு விட்டு தேவன் பேரில் கார்த்திருப் போம். அவர் நமது விசுவாசத் தின் ஜெபத்தை கனப்படுத்தி உயர்த் துவார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •