வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009


இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உற வில் மீனவர் பிரச்சினை நாளுக்கு நாள் முக்கியத் துவம் பெற்று வருகின்றது.

புதுடில்லியிலுள்ள இல ங்கைத் தூதரகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இப்பிரச்சினையே காரணமெனச் சொல் லப்பட்டது. இலங்கைக் கடற்படை இந்திய மீனவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரான கோஷங்கள் தூதரகத் தாக்குதலின் போது கோஷிக்கப்பட்டன.

இந்திய மீனவரை இலங்கைக் கடற்படை தாக்குகின்றது என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் பரவலாக முன்வைக் கப்படுகின்றது. இலங்கை அரசாங்கமும் கடற்படையும் இக் குற்றச்சாட்டைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அமைப் புகளும் இந்த மறுப்பை ஏற்பதாகத் தெரியவில்லை.

மீனவர் பிரச்சினையை முன்வைத்து இலங்கை அரசா ங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் தமிழகத்தின் சில அர சியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. மீனவரின் நலனிலும் பார்க்கக் கட்சி அரசியல் நலனுக்கு இவை முன்னுரிமை அளிப்பதாகவே தெரிகின்றது.

இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை அடுத்த டுத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் கூறுகின்றார் கள். கடற்படை தொடர்ச்சியாக அதை மறுக்கின்றது. அப்படியானால் தாக்குதல் நடத்துபவர்கள் யார்? இலங் கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவைச் சீர் குலைக்கும் நோக்கத்துடன் சிலர் செயற்படுகின்றார் களா? இரண்டு நாடுகளினதும் அரசாங்கங்கள் இவ்விட யத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

மீனவர்கள் அந்தந்த நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பது பிரச்சினைக்கு அடிப்படையாக உள்ளது. இரு நாடுகளின் மீனவர்களும் இத் தவறைப் புரிகின் றார்கள்.

கடல் எல்லையைத் தாண்டியதற்காக இலங்கை மீனவர்கள் இந்தியாவிலும் இந்திய மீனவர்கள் இலங் கையிலும் சிறைவாசம் அனுபவிப்பது இப்போது சகஜ மாகிவிட்டது.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் படை மீது குற்றஞ் சுமத்துவது போல, இந்திய மீனவர் கள் தங்களை இம்சைப்படுத்துவதாக இலங்கை மீனவர் கள் குற்றஞ் சுமத்துகின்றார்கள்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய மீனவர்கள் மீதான தாக் குதல் பற்றி இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் பேசியிருக்கின்றது.

அதேநேரம், இக் குழு யாழ்ப்பாண த்துக்குச் சென்ற வேளையில் அங்குள்ள மீனவர்கள் இந்திய மீனவருக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத் திருக்கின்றார்கள்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பரப்புக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதாகவும் தங்க ளைத் தாக்குவதோடு தங்கள் வலைகளையும் அறுத்து எறிவதாகவும் யாழ்ப்பாண மீனவர்கள் இக் குழுவினரி டம் கூறினார்கள்.

இரு நாடுகளினதும் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் இரு நாடுகளிலும் மற்றைய நாட்டு மீனவர்கள் சிறை வாசம் அனுபவிப்பதும் இரு தரப்பிலும் தவறுகள் இரு ப்பதையே புலப்படுத்துகின்றன.

இந்த நிலைமையை அரசியல் கட்சிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக் குக் குந்தகமான சூழ்நிலை உருவாகுவதற்கு இடமு ண்டு. எனவே இரண்டு அரசாங்கங்களும் கூட்டுச் செயற்பாட்டின் மூலம் இப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வைக் காண முன்வரவேண்டும்.

மீனவர் பிரச்சினை இப்போது சிறியதாகத் தோன்றுகின்ற போதிலும் காலப் போக்கில் பாரிய முரண்பாடாக வளரக் கூடியதென்ப தால் இரு நாடுகளும் உடனடியாகக் கவனம் செலுத்து வது உசிதமானது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி