வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

இந்திய கைதிகள் குறித்து தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் ஆராய்வு

இந்திய கைதிகள் குறித்து தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் ஆராய்வு

தமிழகப் பாராளுமன்றக் குழுவினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடை யிலான சந்திப்பின் போது, இலங்கைச் சிறைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல் திருமாவளவன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள இந்தியப் பிரஜைகளை, இந் தியச் சிறைகளுக்கு மாற்றுமாறும், அவ்வாறு மாற்றினால், அவர்கள் தொடர்பான வழக்கை இந்தியாவில் நடத்த முடியுமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகத் திருமாவளவன் தெரிவித்தார்.

மீனவர்கள் அல்லாத சுமார் 40 பேர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டுள்ளதால், அவர்களின் வழக்குகளை இந்தியாவில் விசாரணை செய்ய நடவ டிக்கை எடுக்க முடியுமென எடுத்துக் கூறியதாக அவர் கூறினார்.

இது தொடர்பில், கைதிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும் என ஜனாதிபதி பதிலளித்ததாக தொல் திருமாவளவன் குறிப்பிட்டார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •