வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

ஐ.ம.சு.மு பொதுத் தேர்தலிலும் 2/3 பெரும்பான்மை பலம் பெறும்

ஐ.தே.கவின் வாக்கு வங்கி 20 இலட்சத்தினால் வீழ்ச்சி

ஐ.ம.சு.மு பொதுத் தேர்தலிலும் 2/3 பெரும்பான்மை பலம் பெறும்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

கடந்த நான்கு வருட காலத்தில் ஐ. தே. க.வின் வாக்கு வங்கி 20 இலட்சம் வாக்குகளினால் குறைந்து ள்ளது. ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க. வைவிட 25 ஆயிரம் மேலதிக வாக் குகளை பெற்றுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தலைப் போன்றே எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ. ம. சு. முன்னணி 2/3 பெரும்பான்மை பலத்தை பெறும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஐ.தே.க. ஆட்சியில் நடைபெறும் தேர்தல்களின்பின் எதிர்க்கட்சி வீடுகள் தீ வைக்கப்படுவதோடு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கொல்லப்படுவார் கள். ஆனால், தென் மாகாண தேர் தலின் போதோ, தேர்தலின் பின் னரோ எதுவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

சுதந்திர தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படாத நிலை யில் கூட சுதந்திரமான தேர்தலை நடத்த முடிந்தது குறித்து நாம் பெருமையடைகிறோம்.

ஜே. ஆர். ஜயவர்தன அறிமுகப்ப டுத்திய விகிதாசார தேர்தல் முறை மூலம் எந்த ஒரு கட்சிக்கும் 2/3 பலம் பெற முடியாது என்ற நிலையே காணப்பட்டது. ஆனால் தென் மாகாண சபைத் தேர்தலில் அந்தக் கருத்தை நாம் மாற்றியமைத்துள் ளோம்.

பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ. ம. சு. முன்னணி 2/3 பெரும்பா ன்மை பலம் பெறுவது உறுதி. அதன் மூலம் தற்பொழுது நடைமுறை யிலுள்ள விருப்பு வாக்கு முறையுடன் கூடிய தேர்தல் முறையை நாம் மாற்றுவோம். ஐ. ம. சு. முன் னணியின் கரங்களைப் பலப்படுத்து வதன் மூலமே தேர்தல் முறையை யும் தற்பொழுதுள்ள யாப்பையும் மாற்ற முடியும்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த ஐ.தே.க. தற்பொழுது எதிர் ப்புத் தெரிவித்து வருகிறது. ஜே. வி. பி. யும் இதனை நிராகரித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட மாகா ணம் தவிர ஐ. தே. க. 46,35,045 வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2008-09 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் (வடக்கு தவிர) ஐ.தே.க. 26,93,086 வாக்குகளே பெற்றுள்ளது. 4 வருடத்தில் ஐ.தே. கட்சியின் வாக்குகள் 20 இலட்சத்தினால் குறைந்துள்ளது.

2005 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 48,67,988 வாக்குகளைப் பெற்றது. 2008-09 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணி 51,57,170 வாக்குகளை பெற்றது. இதன் மூலம், ஐ. தே. க.வைவிட 25 இலட்சத்து 47 ஆயிரம் மேலதிக வாக்குகளை ஐ.ம.சு.மு. பெற்றுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஐ.தே.க. வுக்கும் சு.க.வுக்கும் 35 முதல் 40 வீத ஸ்திரமான வாக்கு வங்கி இருந்து வந்துள்ளது. ஆனால் தற்பொழுது ஐ.தே.க. வின் வாக்கு வங்கி 17 வீதமாகக் குறைந் துள்ளது. ஜே.வி.பி.யின் வாக்குகளும் பெருமளவு குறைந்துள்ளது.

கடந்த கால தேர்தல் முடிவுகளின் மூலம் ஜனாதிபதி மற்றும் ஐ.ம.சு. முன்னணி மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் மங்கள சமரவீரவை இணைத்து ஐ.தே.க. கூட்டணி அமைத்த போதும் ஐ.ம.சு. முன்னணியை எந்தக் கட்சியாலும் அசைக்க முடியாது. தமது வாக்குகளை தக்க வைக்க முடியாத ஐ.தே.க.வினால் கூட்டணி அமைத்து எதனையும் சாதிக்க முடியாது.

அடுத்து வரும் இரு பிரதான தேர்தல் களிலும் நாம் அமோக வெற்றியீட்டுவோம்.

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறிய தாவது, தென் மாகாண சபைத் தேர்தலில் தமது வாக்குகள் அதிகரித்துள்ளதாக ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் கூறியுள்ளன.

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐ. தே. க.வைவிட 43.26 வீத மேலதிக வாக்குகளை ஐ.ம.சு. முன்னணி பெற்றுள்ளது. 2006 இல் நடைபெற்ற தென் பகுதி உள்ளூராட்சி சபை தேர்தல்களில் ஜே.வி.பி. 1,72,000 வாக்குகளை பெற்ற போதும் 2009 தென் மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. 71,000 வாக்குகளே பெற்றுள்ளது என்றார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •