வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009


மத்திய மாகாண பாடசாலைகள் மத்தியில் கண்காட்சிப் போட்டி

சாஹித்திய விழாவை முன்னிட்டு

மத்திய மாகாண பாடசாலைகள் மத்தியில் கண்காட்சிப் போட்டி

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவோடு இணைந்து நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டிகளில் ரத்தோட்ட கணேஸ்வரா த.வி. முதலிடத்தினையும், மாத்தளை இந்து தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தினையும், மாத்தளை திருவள்ளுவர் த.வி. மூன்றாம் இடத்தினையும், ரத்தோட்ட மிட்லண்ட் த.வி நான்காம் இடத்தினையும், ரத்தோட்ட கந்தேநுவர த.வி ஐந்தாம் இடத்தினையும் பெற்றன.

14 பாடசாலைகள் கலந்து கொண்ட இந்த கண்காட்சியில் பங்குபற்றிய சகல பாடசாலைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் நடுவர்களால் 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. (ஐ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •