புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

தமிழகத்தின் அரசியல் பாதயாத்திரை

தமிழகத்தின் அரசியல் பாதயாத்திரை

தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாதயாத் திரை செல்கிறார். வருகின்ற செப்டெம்பர் 25ஆம் திகதி, 133 அடி திருவள்ளுவர் சிலை இருக் கும் கன்னியாகுமரி மாவட்டத்திலி ருந்து யாத்திரையைத் தொடங்குகி றார். 38 நாட்கள் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் அவர், அ.தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி மக்க ளிடம் நேரடியாகப் பேசப் போவ தாக அறிவித்திருக்கிறார்.

மக்களுடன் நேரடியாகக் கலந்து ரையாடல், பொதுக்கூட்டங்கள், சாலையோர நிகழ்ச்சிகள் என்று 'மக்கள் சங்கமம்'' என்ற இந்த திருவிழாவுக்கு தி.மு.க சூட்டியுள்ள பெயர் 'நமக்கு நாமே''. இப்பய ணம் இரு விதத்தில் தி.மு.க.வுக்கு மிக முக்கியமானது. முதலில் தி.மு. கவுக்குள் அறிவிக்கப்படாத முதல் வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பது இந்தப் பாதயாத்திரையில் உறுதி செய்யப்படும்.

இன்னொன்று மக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டுவதால் மற்றைய கட்சிகள் 'தி.மு.க.தான் அடுத்து ஆட்சிக்கு வரும். ஆகவே, அக்கட்சியுடன் கூட்டணி வைப்போம்'' என்ற எண்ணவோட்டத்துக்கு வரும். இதுவரை 'மதுரையில் கேள்வி கேட்கும் பேரணி'', 'கடலூரில் நீதி கேட்கும் பேரணி'' நடத்தி முடித்து விட்ட தி.மு.க., இந்தச் சுற்றில் பாதயாத்திரை புறப்பட்டுள் ளது. இதற்கு முன்பு செப்டெம்பர் 5ஆம் திகதி திருப்பு+ர் மாவட்டத் தில் 'மீண்டுமொரு பேரணி'' போன்ற மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத் தும் அக்கட்சி 'நுடநஉவழைn அழனந' என்று சொல்வார்களே, அந்தக் கட்டத்துக்கு அவசரமாக வந்து நிற்கிறது.

இந்தப் பாதயாத்திரை அறிவிப் புக்கு முன்பு 'மதுவிலக்கை அமுல் படுத்துவோம்'' என்று பிரகடனப் படுத்தி, பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது தி.மு.க. இதனால், மது விலக்குப் போராட்டம் விஸ்வரூ பம் எடுத்து, இன்றைக்கு அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சிகளுமே 'மதுவிலக்கு வேண்டும்'' என்ற ஒற்றைக் கோ'த்தை ஓங்கி ஒலிக் கின்றன. முதலில் 'மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்'' என்ற தி.மு.க. அறிவிப்பு, காந்த சக்தி கொண்ட தாக மக்கள் போராட்டத்தைத் தூண்டி விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த அறிவிப்புக்குப் பிறகு அதற்காக நீண்டகாலமாகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள், நாகர்கோயிலில் 150 அடி அலை பேசிக் கோபுரத்தில் ஏறி 'இறங்க மாட்டேன்'' என்று போராடினார்.

அவரை அப்படியே கோபுரத்தில் இருக்கவிட்டதால், அங்கேயே உடல் நலம் குன்றிய அவர் கீழிறக்கப்பட்ட போது கிட்டத்தட்ட இறந்து போன நிலைதான். அவர் உயிரிழப்பு மது விலக்குப் போராட்டத்தில் 'திருப்புமுனை'' என்றே சொல்ல வேண்டும்.

இதை அடிப்படையாக வைத்து எழுச்சி ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் 'டாஸ்மாக் மது பானக் கடைகள்'' முன்பு ஆர்பாட்டம், போராட்டம் என்று தொடங்கின.

அடுத்து - வைகோ, மாக்ர்ஸிஸ்ட் கம்யு+னிஸ்ட் கட்சி ஜp.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அடங்கிய 'மக்கள் கூட்டு இயக்கம்'' சார்பில் தமிழக பந்த் அறிவிக்கப்பட்டது. கம்யு+னிஸ்ட் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் வைகோவே பந்த் அறிவித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு கிளம்பினாலும், 'மக்கள் கூட்டு இயக் கத்தில்'' உள்ள கட்சிகள் அனைத் தும் இந்த பந்தை ஆதரித்தன. இம்மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற இந்த பந்த்தில் பா.ம.க., தி.மு.க. போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை.

அவர்களின் ஆதரவை பந்தை அறி வித்தவர்களும் கோரவில்லை. ஆனால், இ.காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தாங்களாகவே முன்வந்து ஆதரவளித்தன. இந்த பந்த் அவ்வள வாக வெற்றி பெறவில்லை என்றா லும், மாநிலம் முழுக்க மதுக்கடை களுக்கு பொலிஸ் பாதுகாப்புப் போட வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு கடந்த 6ஆம் திகதி மதுவிலக்கு அமுல்படுத்தக் கோரி பொலிஸ் அனுமதி இல்லாமல் விஜய காந்த் 'கோயம்பேடு முதல் கோட்டை'' வரை மனித சங்கிலிப் போராட்டம் அறிவித்தார். அதற்கு பொலிஸ் அனு மதி கொடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்திலும் அனுமதி கோரிப் பார்த்தார்.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே 'மனிதச் சங்கிலி'' போராட் டத்தை விஜயகாந்த் கோயம்பேட் டில் தொடங்கினார். அதில் விஜய காந்த், அவர் மனைவி பிரேமலதா ஆகியோர் கைது செய்யப்பட்டு, இர வில் நீண்ட நேரத்துக்குப் பிறகு விடு தலை செய்யப்பட்டனர். ஓகஸ்ட் 7ஆம் திகதி,அலைபேசிக் கோபுரத்தில் ஏறி இறந்த சசி பெருமாளின் உடலைப் பெற்றுக் கொண்டு சேலத்தில் அவரது உறவினர்கள் நல்லடக்கம் செய்தார்கள்.

அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேரடியாகச் சென்று அஞ் சலி செலுத்தினார். எல்லாவற்றுக் கும் மேலாக கடந்த 10ஆம் திகதி தி.மு.க.வின் சார்பில் 'மதுவிலக்கை உடனே அமுல்படுத்தக் கோரி'' மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இப்படி தமிழக அரசியல் ஜ_லை மாதத்தில் இருந்து இந்த இம்மாதம் வரை 'மதுவிலக்கு மாதமாக'' காட்சி யளித்துக் கொண்டிருக்கிறது. ஒவ் வொரு அரசியல் கட்சிகளும் தங் களின் பலத்துக்கு ஏற்றவாறு 'மது விலக்கு அரசியலை'' முன்னெடுத் துச் செல்கின்றன. தமிழக மக்கள் மத்தியிலும் 'மதுவிலக்கு வர வேண் டும்'', 'மதுக்கடைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்'' என்ற எண் ணம் பெருகி வருகிறது.

மதுவிலக்கு அமல்படுத்த வேண் டும் என்பதில் அனைத்துக் கட்சிக ளும் ஒன்றாக இருந்தாலும், 'கூட் டணி'' என்பதிலோ, அனைவரும் ஒன்றாகப் போராடுவோம் என்ப திலோ எந்தக் கட்சிகளும் ஒரே அணியில் சேரவில்லை என்பது தமிழக அரசியலின் துரதிர்ஷ்டம். 'தி.மு.க. அல்லது அ.தி.மு.க.'' ஆகிய இரு கட்சிகளில் ஒன்றை எப்படித் தேர்வு செய்வது என்ப தில் உள்ள குழப்பமே இதற்குக் காரணம்.

இந்தக் குழப்பத்தைப் பார்த்துத் தயங்கி நிற்க, தி.மு.க. போன்ற கட்சியோ, அ.தி.மு.க.வோ தயா ராக இல்லை. இதுதான் ஸ்டாலி னின் பாதயாத்திரை அறிவிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியும். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவுக்கா கக் காத்திருப்பதை விட, மக்களி டம் சென்று நேரடியாகத் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதே சாலச்சிறந் தது என்று கருதுகிறது தி.மு.க. தலைமை.

இதனால்தான் இந்தப் பாதயாத் திரை பல்வேறு தரப்பு மக்களை யும் சந்திக்கும் வகையில் அமைக் கப்பட்டு, மூன்று கட்டங்களாக தமிழகத்தில் நடக்கப் போகிறது. இறுதியில் நவம்பர் 8ஆம் திகதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'ஸ்டாலின் யாத்திரை'' நிறைவுக்கு வருகிறது. 'மக்கள் சந்திப்பு' என்பதை முன் வைத்து தி.மு.க. காய் நகர்த்திக் கொண்டிருக்கின்ற வேளையில், சென்னையில் வித்தியாசமான நிகழ்ச்சி கடந்த 7ஆம் திகதி நடைபெற் றுள்ளது.

முதல் 'தேசிய கைத்தறி தினத்தை'' முதல் முறையாக தமிழகத்தில் மத்திய அரசு கொண்டாடியிருக்கி றது. சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து கைத்தறி நெசவாளர்கள் வந்திருந் தார்கள். தமிழில் பேசிய பிரதமர் மோடி கூட்டத்தை மகிழ்வித்தார். இக் கூட்டம் முடிவடைந்ததும் அவர் நேராக முதல்வர் nஜயலலிதா வசிக்கும் போயஸ் தோட்டத்துக்குச் சென்றார்.

அங்கு முதலமைச்சருடன் சந்தித் துப் பேசினார். 'லேடியா, மோடியா'' என்று பிரதமர் நரேந்திரமோடி பற் றித் தேர்தல் பிரசாரத்தில் தாக்கு தல் நடத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இது மூன்றாவது சந்திப்பு. முதலில் பிரதமரானதும் nஜயலலிதா - டெல்லி சென்று நரேந்திரமோடியைச் சந்தித்தார். பிறகு ஸ்ரீஹரி ஹோட்டாவுக்குச் செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பிரதமரை முதலமைச்சர் nஜயலலிதா சந்தித்தார்.

இப்போது மூன்றாவது முறையாக ஜெயலலி தாவின் வீட்டுக்கே சென்று மோடி அவரைச் சந்தித் துள்ளார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலுமே அரசியல் இருக்கிறது என்று எதிர்பார்ப்பு நிலவு கிறது. தமிழகத்தில் மாறி வரும் அரசியல் சு+ழ்நிலை யில் பாரதிய ஜனதாக் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட லாம் என்பதால் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

2-ஜp அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்சத் தில் இருந்த போது சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே போன்றதொரு நெருக்கடியில் இருக்கிறது அ.தி.மு.க.

முதலமைச்சர் nஜயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது போன்ற தொரு அரசியல் சு+ழலில் மத்திய அரசுடன் நட்புப் பாராட்டும் விதமாக பா.ஜ.க.வுடன் கூட் டணி வைத்துக் கொள்ளும் கட்டாயம் அ.தி.மு.க. வுக்கு வரலாம் என்பதே தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவும் கருத்து. இந்த அடிப் படையில் பார்த்தால் 'மக்களை நோக்கி' பாத யாத்திரை செல்கிறது தி.மு.க என்றால் பா.ஜ. க.வை நோக்கி பக்குவமாக நகர்ந்து செல்கிறது அ.தி.மு.க.

இந்த இரு திராவிடக் கட்சிகளின் அசைவுக ளையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக் கின்றன மற்றைய அரசியல் கட்சிகள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.