புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

சிலனிதர்களும் . . . .

சிலனிதர்களும் . . . .

(சென்ற வார தொடர்...)

அதைக் கொஞ்சமும் ஆதித்யா கவனிக்க வேயில்லை!

ஆதித்யா நிறுத்தவில்லை தொடர்ந்தாள்.

ஒரு சாதாரண சேட்டும் ரவுசரும் போட்டுக் கொண்டு மேவி இழுத்த தலையோடு அப்பா நடந்தால் ஐயா என்று கையெடுத்துக் கும்பிட்டு மரியாதை கொடுக்கிற சமூகம்தான் அப்பா வாழிற சமூகம். அதுதானம்மா உண்மையான சமூகம். நீ பார்க்கிற பழகிற சமூகம் ஒரு போலியான சமூகம். நீ சரியான ஒரு மனைவியாக இருந்தால் அப்பாவுக்கு வருத்தம் என்று கேள்விப்பட்டவுடன் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீ அப்படிச் செய்யேல்லை. ஏன்? சாரங்கன் இல்லை ஆர் தடுத்தாலும் நான் கேட்கப்போறதில்லை. எனக்கு இந்தத் தொழில் கணவன் சமூகம் இவை எல்லாவற்றிக்கும் மேலை அப்பாதான் முக்கியம். உனக்கு உன்ரை அண்ணன்தான் முக்கியம். எனக்கென்ன நீ எக்கேடும் கெட்டுப்போ.

என்று சத்தமிட்டுவிட்டு கதைவை அடித்துச் சாத்திக்கொண்டு வெளியேறினாள். ஆதித்யாவின் இந்த வேகமான பேச்சினால் மதிவதனி கலகலத்துப்போனாள். அவளுடைய சிந்தனை நிறைந்த வினாக்களும் உக்கிரமான பார்வையும் தான் பிழை விட்டுவிட்டோமோ என்று நினைக்குமளவுக்கு இருந்தது. ஆதித்யா போகும் வேகத்தில் ஏதாவது நடந்து விடுமோவென்று மனதுக்குள் பயந்து தான் இவ்வளவு காலமும் பட்ட கஸ்டமெல்லாம் அர்த்தமற்றதாகி விடுமோ வென்று பயந்து வேகமாக சாரங்கனின் தொலைபேசி எண்ணைச் சுழற்றினாள்.

நல்லவேளையாக சாரங்கன் கதைக்க நடந்த விடயமெல்லா வற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள்.

சாரங்கன் குழம்பவில்லை. அவனுக்கு ஆதித்யாவைப்பற்றி நன்கு தெரியும். ஐந்து வருடமாகக் காதலித்தல்லவா மணம் புரிந்தவன். அவள் எப்படிக் கதைப்பாள் என்பதும் எப்படி அவளை வழிக்குக் கொண்டு வருதென்பதும் சாரங்கனுக்கு அத்துப்படி. ஆதித்யா தகப்பன் மீது அவளவு கடந்த பாசம் கொண்டவள் என்பது அவனுக்கு நன்கு புரியும்.

தகப்பனுக்காக அவள் எதனையும் செய்வாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆதலால் இதனை புத்திசாலித்தனமாகக் கையாளவேண்டுமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

காத்திருந்தான். சிறிது நேரம் கழித்துக் கதவைத் திறந்து கொண்டு ஆதித்யா உள்ளே வருவதை கவனியாதவன் போல் தொலைக்காட்சிப் பெட்டியில் கவனத்தைச் செலுத்தினான்.

வேகமாக உள்ளே வந்த ஆதித்யா நேரே படுக்கை அறைக்குள் சென்று விட்டாள். சிறிது நேரம் அவள் வெளியே வரவில்லை. சாரங்கன் மெதுவாக எழுந்து அறைக்குள் எட்டிப் பார்த்தான். ஆதித்யா உடுப்பையும் கழட்டாமல் கட்டிலில் படுத்தபடி கூரையை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதி Are you ok. Any problem?" என்று ஒன்றுமே தெரியாதவன்போல் அமைதியாகக் கேட்டான். ஆதித்யா பதிலே சொல்லவில்லை.

சாரங்கன் மெதுவாக அவளுக்கருகில் சென்று தலையைத் தடவிக் கொடுத்தபடி.

ஆதி arling what happen? Any problem at work? மெது மையாக அவன் அவள் தலையைத் தடவிக்கொண்டு கேட்டபோது ஆதித்யா கலங்கிப்போய் அவனது தலையைப் புதைத்து ஓவென்று அழத்தொடங்கிவிட்டாள்.

அவளது அழுகையை ஒருவாறு சென்று நடந்ததைக் கேட்டான் சாரங்கன். ஆதித்யாவும் முழுவிடயத்தையும் கூறினாள்.

அத்தோடு தான் உணர்ச்சிவசப்பட்டு தாய்மீது தகாத வார்த்தைகளையும் வசனங்களையும் பாவித்ததாகக் கூறி அவள் அழுதபோது சாரங்கன் அவளது.

உயர்த்த உள்ளத்தை மனதுக்குள் ரசித்தான்.

அதற்குப்போய் ஏன் வருத்தம். நாளைக்கே நானும் நீயும் இலங்கைக்குப் போய் அப்பாவைப் பார்த்துச் செய்யவேண்டியதெல்லாம் செய்து இரண்டு கிழமை நிண்டு வருவமே என்று சாரங்கன் சொன்னபோது ஆதித்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வீட்டிற்கு வந்து இன்னுமொரு யுத்தம் புரிய வேண்டி வரும் என்று நினைத்து வந்தவளுக்கு சாரங்கன் முற்றிலும் முன்பு கதைத்ததற்கு மாறாக நானும் வருகிறேன் என்று கூறியபோது ஆதித்யா பேச்சற்று நின்றாள். அடுத்து என்ன கதைப்பது என்று புரியாமல் அவன் மார்பில் முகத்தைப் புதைத்து ஓவென்று அழுதாள். அவளுடைய தலையை மெதுமையாகத் தடவிக் கொடுத்தபடி அவளின் துயரத்தில் தானும் பங்கெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தான் சாரங்கன்.

சாரங்கனுக்கும் ஆதித்யாவுக்கும் வயதளவில் ஒன்று தான் வித்தியாசம். சூழ்நிலை அவர்களுக்கிடையில் காதலை மலர வைத்தது. சாரங்கனுடைய பின்புலம் நிரம்பத் துயரமானது. ஆதித்யா இந்த நாட்டுக்கு வந்த பின் தான் அவன் வந்திருந்தான். அதனால் நாட்டின் துயரங்களை நன்கு அனுபவித்து வந்தவன் அவன்.

நிரம்ப ஒழுங்கீனங்களை நிரம்பத் துரோகங்களை எல்லாம் கண் கூடாகப் பார்த்து வெறுப்படைந்து ஒதுங்கி வெதும்பிக் கொண்டிருந்த நேரத்தில் தான் நினையாப் பிரகாரமாக அவனுக்கு இந்த வெளிநாட்டுச் சந்தர்ப்பம் கிடைத்து.

இதைத்தான் விதி என்று சொல்கிறார்களோ என்னவோ!

சாரங்கனைப் பொறுத்தவரை படிப்புத்தான் முதல். மற்றதெல்லாம் பின்பே. படிப்புக்கு இடைஞ்சலாக எது வந்தாலும் அவன் பொருட்படுத்தவே மாட்டான். இதனால் தான் நாட்டில் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவனுடைய சிந்தனை பங்குபற்றுவதில் இல்லாமல் வெளிநாடு செல்வதில் குறியாக இருந்தது. பொடியன்கள் சண்டை பிடித்து சுதந்திரத்தைப் பெற்றுத் தரட்டும் நான் போய்ப் படிப்பும் என்றுதான் அவன் நினைத்தான். அவனுடைய நினைப்புகளுக்கு அவனே பல காரணங்களை வைத்திருக்கிறான்.

கல்வியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மாபெரும் ஊர்வலத்தில் சாரங்கனின் பாடசாலையின் சார்பாக அவனும் கலந்து கொண்டான். எவ்வளவு உணர்ச்சிகரமான ஊர்வலம். திடீரென்று ஒரு நாள் பதின்மூன்று இராணுவத்தினர் இறந்ததாக செய்தி வந்த போதுதான் நிலைமையின் கடுமையை முதல் முறையாக சாரங்கன் உணர்ந்தான்.

அந்த நிலையிலும் அவன் போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென்ற எண்ணத்தால் கவரப்படவில்லை.

திடீர் திடீரென்று படைகள் மரணிப்பதும் அதன் விளைவாக பல பொதுமக்கள் மரணிப்பதையும் கண்டபோது நாட்டை விட்டுத் தப்பி ஓடவே சாரங்கன் நினைத்தான். சாரங்கன் பயப்படத் தொடங்கினான்.

இந்தப் பயத்தின் உச்சம்தான் அவன் இன்று லண்டன் நகரத்தில் வாழ்வது. அவன் மட்டுமல்ல அவனைப்போல் பல இளைஞர்கள் இப்படி வந்துவிட்டார்கள்.

அவன் மாமா வீட்டுக்கு வந்தபோது எல்லாமே அவனுக்குப் புதிதாக இருந்தன.

மாமாவுக்கு இரு பிள்ளைகள். ஒருவர் அவனுடைய வயதை ஒத்தவர். மற்றவர் அவனைவிட இளையவர். இருவருமே ஆண்கள்தான். அவனுடைய மாமாவின் பிள்ளைகளின் வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது அவனுக்கு வியப்பாக இருந்தது. இங்கு பிள்ளைகளுக்குக் கூடச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பது போல் சாரங்கன் உணர்ந்தான். ஆனால் அவன் எந்தச் சுதந்திரத்தையும் அகப்படுத்திக்கொள்ளாமல் தானும் தன் படிப்பும் என்றே வாழ்ந்தான்.

பாடசாலை செல்வது படிப்பது சாப்பிடுவது படுப்பது இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்ததாக இல்லை. மாமா வாழ்ந்த வீட்டில் மூன்று அறைகள். ஒரு அறை மூத்தவருக்கும் இரண்டாவது அறை இளையவருக்கும் மூன்றாவது மாமா மாமிக்கும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தன. அவனுடைய படிக்கும் மேசை சாப்பாட்டு மேசைதான். மாமாவின் பிள்ளைகள் படிப்பது மிகக்குறைவு. அவர்கள் மேல்நாட்டு சங்கீதம் கேட்பதும் தங்களுடைய தொலைபேசியில் gaசீலீ விளையாடுவதுமாக இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை சாரங்கன் ஒரு பட்டிக்காடு. தாங்கள் நாகரிகம் தெரிந்தவர்கள். சாரங்கன் இவை எதைப்பற்றியுமே கவலைப்படுவதில்லை. மாமி சிலவேளைகளில் சாரங்கனை உதாரணம் காட்டி அவர்களைப் பேசுவா. அவர்கள் சாரங்கனை ஒரு பார்க்கக் கூடாத பிராணியைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். அவர்களுடைய பாசையில் பார்வையில் சாரங்கன் ஒரு ஜீrலீshiலீ.

சாரங்கன் மாமாவுக்குத் தெரியாமல் செய்த ஒரே காரியம் ஆதித்யாவைக் காதலித்ததுதான். சாரங்கனைப் போன்ற பல பிரச்சினைகளை அனுபவித்தவள்தான் ஆதித்யா. சர்வகலாசாலையில் அவர்கள் இருவருக்கும் நட்பு தொடங்கியதற்கு அடிப்படைக் காரணமே அவர்கள் இருவரும் மற்றப் பிள்ளைகளால் ஜீrலீshiலீ களாக ஒதுக்கப்பட்டமைதான். அவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து கொண்டார்கள். படிப்பைப் பற்றியும் நாட்டைப் பற்றியும்தான் அடிக்கடி கதைப்பார்கள்.

அது காதலாக மலர்ந்து விட்டது.

ஆரம்பத்தில் அவர்களுடைய காதலுக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்தது. இறுதியில் அவர்களுடைய உறுதிக்கு வெற்றி கிடைத்தது. ஆரம்பம் முதலே ஆதித்யாவை நன்கு புரிந்து கொண்டவன் சாரங்கன். அவளுடைய அப்பா பாசம் அவனுக்கு வியப்பைத் தருவதுண்டு. அதில் தவறு இருப்பதாகவும் அவனுக்குப் படவில்லை. அவள் தாயின் மீது போடும் குற்றச்சாட்டுகளையிட்டு அவன் அபிப்பிராயம் கூறுவதை கூடுமான அளவுக்கு தவிர்த்தே வந்திருக்கிறான். இது அவளுக்கும் புரியும்.

ஆரம்பத்தில் ஆதித்யா வந்து நான் நாட்டுக்குப் போகப் போகிறேன் என்ற போது அவன் மறுத்தது உண்மைதான். அதற்கு காரணம் வேறு. அவனைப் பொறுத்தவரை பிறந்த மண்ணுக்குப் போவதில் அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. அந்த மண்ணில் அவன் பட்ட துயரங்கள் ஏராளம். அதன் தாக்கமாகவே ஆதி ஊருக்குப்போவதை அவன் அடியோடு வெறுத்தான். ஆதித்யாவின் துன்பம் அவனை மாற்றிவிட்டது. அவளுக்காக அவன் எதையும் நேர்கொள்ளத் தயாராகிவிட்டான்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.