புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

2015 SLIM NASCO விருது விழாவில

2015 SLIM NASCO விருது விழாவில்

பிரகாசித்த எயர்டெல்

கீர்த்திமிக்க NASCO விருது வழங்கும் விழாவில், எயர் டெல்லின் விற்பனை அணி இரண்டு விருதுகளை வென் றுள்ளது. இந்த விழாவின் போது எயர்டெல்லின் மூலோ பாய முன்னிலைகளும், சந்தைப்படுத்தல் தத்துவங்களும், பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன. NASCO இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனக் (SLIM)  கலண்டரில் இடம்பிடித்துள்ள முக்கியமான வருடாந்த நிகழ்வாகும்) நாட் டில் உள்ள மிகச் சிறந்த விற்பனை நிபுணர்களை அங்கீ கரித்து கௌரவிக்கும் ஒரு நிகழ்வே இதுவாகும்.

உலகின் மூன்றாவது பெரிய நடமாடும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களான (வாடிக்கையாளர் தளத்;தைப் பொறுத்தமட்டில்) பார்த்தி எயர்டெல் ஆசியா மற்றும் ஆபி ரிக்காக் கண்டங்களில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 330 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இலங்கையில் அதன் முகாமையாளர்கள் இருவர் 2015 SLIM NASCO விருதுகளை தொலைத் தொடர்பு பிரிவில் பெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

இடைநிலை முகாமைத்துவ வகைப்படுத்தலின் கீழ் தொலைத் தொடர்புப் பிரிவில் எயர்டெல்லின் இரண்டு முகாமையா ளர்கள் வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை வென்றுள் ளனர். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிப் பிரிவு முகாமையாளர் இஸ்பார் அன்வர்டீன் வெள்ளி விருதையும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அலைவரிசை முகாமைத்துவப் பிரிவு முகாமையாளர் ஆN' 'ஹாப்தீன் வெண்கல விருதையும் வென்றுள்ளனர்.

இவர்களின் சாதனை குறித்துக் கருத்து வெளியிட்ட பார்த்தி எயர்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறை வேற்று அதிகாரி ஜpனேஷ் ஹெக்தே "தேசிய மட்டத்தில் எமது முகாமையாளர்கள் இருவர் இந்த விருதுகளை வென் றுள்ளமை குறித்து நாம் பெருமை அடைகின்றோம். சந் தையில் எமது ஏனைய விற்பனை அதிகாரிகளும் சாதனை படைக்க இது பெரும் உந்து சக்தியாக அமையும் என்று நாம் நம்புகின்றோம். சந்தையில் மேம்படுத்தப்பட்ட எமது இயல்பான விற்பனை சுபாவங்கள், சுறுசுறுப்பான விற்பனை மூலோபாயங்கள் என்பன தான் இதற்கு முக்கிய காரணங் களாக அமைந்துள்ளன. மிகவும் சுறுசுறுப்பான, போட்டிமிக்க சந்தைச் சூழலில் எயர்டெல் இந்த விற்பனை மூலோபாயங்களை மிக நேர்த்தியாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது. இஸ்பார், ஆN' ஆகிய இருவருக்கும் நான் எனது மனப்பு+ர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விற்பனைத் துறையில் அவர்களது தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், வெற்றியையும் நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்" என்று கூறினார்.

SLIM NASCO 2015 விற்பனைத் துறையில் அதி உயர் இலக் குகளை அடையும் விற்பனை துறைசார் நிபுணர்களை அங் கீகரித்து, கௌரவித்து ஊக்குவிக்கும் ஒரு வருடாந்த நிகழ்வா கும். இம்முறை 15 வர்த்தகப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப் பட்டன. தங்கம், வெள்ளி, வெண்கல விருதுகளுக்கு மேலதிக மாக, ஒவ்வொரு துறையிலும் சிறந்த பெண் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டார்.விற்பனை குழுவினரின் பலத்தை விஸ்தரிக்கும் ஜனசக்தி

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறு வனங்களில் ஒன்றான ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் அதன் கிளை நடவடிக்கை களை 12 பிராந்தியங்களில் விஸ்தரித் துள்ளது. ஜனசக்தி நிறுவனம் சுமார் ஓராண்டிற்கு முன்னர் ஒரு முக்கிய ஸ்தா னத்தில் அதன் ஆயுள் நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்தது.

"எமது ஆயுள் விற்பனை குழுவினரின் தொடர்ச்சியான தொழில்சார் விருத்திக் கான ஆண்டாக இது அமைந்திருந்தது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு அவர் கள் தமது திறன்களை மேம்படுத்திக் கொண் டுள்ளனர். இந்த விற்பனை குழு பிரதி நிதிகள் நாடுமுழுவதும் எமது பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது திறன் களை பயன்படுத்துவர் என நாம் நம்பு கின்றோம்" என ஆயுள் விற்பனை (கூட்டாண்மை விற்பனை மற்றும் மூலோபாய தொடர்பு அபிவிருத்தி) பிரிவின் உதவி பொது முகா மையாளர் நிலங்க கருணாரத்ன தெரி வித்தார்.

இந் நிலையத்தில் விற்பனை ஊழியர்க ளின் செயற்பாடுகளை மேம்படுத்தல் எனும் நீண்டகால குறிக்கோளுடன் பணிக்கமர்த் தப்படும் ஊழியர்களுக்கு விரிவான பயிற்சி கள் மற்றும் அபிவிருத்திகள் வழங்கப்படு கின்றன. தொழில் ரீதியாக உருவாக்கப்பட்ட இந்த ஊழியர்கள் தற்போது மேல்மாகாணம் முழுவதுமுள்ள 12 முக்கிய இடங்களில் பதவிகளை வகித்து வருகின்றனர்.

இதில் கந்தானை, நீர்கொழும்பு, வத்தளை, கம் பளை, அவிசாவளை, மினுவங்கொட, ஹேமாகம, தெஹிவளை, நுகேகொட, பத்தரமுல்ல, அத்துருகிரிய மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன.

"ஆயுள் காப்புறுதி நிலையத்தின் முதலாவது ஆண்டு நிறைவு கடந்த ஜன் மாதம் 3ஆம் திகதி பு+ர்த்தி செய்யப்பட்டி ருந்தது. கடந்த ஆண்டு ஆயுள் நிலையத் தைச் சேர்ந்த விற்பனை குழுவினருக்கு நாம் பயிற்சி அளித்திருந்ததுடன், தற்போது அவர்கள் மேலதிக பொறுப்புக்களையும் பொறுப்பேற்கக்கூடிய நிலையில் காணப் படுகின்றனர். மிக முக்கிய பிரிவுகளில் அவர்களை பயன்படுத்த நாம் தீர்மானித்த துடன், இதனூடாக ஜனசக்தி வளர்ச்சியு டன் இணைந்து அவர்கள் தம்மை மேம் படுத்திக்கொள்ள முடியும்" என ஆயுள் (விற்பனை மற்றும் செயற்பாடுகள்) பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீர வர்தன தெரிவித்தார்.

தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் தற்போது 110 இற்கும் மேற்பட்ட கிளைகளில் ஜனசக்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.