புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாக தமிழ் கைதிகள் நிலை

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களைத் திரட்டித் தருமாறு ஜனாதிபதி மைத்திரி ஜ. ம. மு. தலைவர் மனோ கணேசனிடம் விடுத்த கோரிக்கையைக் கேட்டதும் இக் கைதிகளுக்கும், கைதிகளின் உறவுகளுக்கும் வயிற்றில் பாலை வார்த்தது போலுள்ளது.

இதுவரை காலமும் பெலுமூச்சு விட்டு வந்த இவர்கள் தமக்கு விடிவு ஏற்பட்டுள்ளதாக மகிழ்ந்தார்கள். எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாக சந்தேகம் எனும் சாபத்தினாலேயே பல தமிழ் இளைஞர்கள் கைதிகளாக உள்ளே இருக்கிறார்கள். மனோ கணேசனின் விடாமுயற்சிக்கு காலந்தாழ்த்தியேனும் பலன் கிடைத்துள்ளமைக்குப் பாராட்டுக்கள்.

* உண்மை என்ன என்பது யதீந்திராவுக்கு அல்ல கடவுளுக்குத்தான் வெளிச்சம்

ஆட்சி மாற்றத்தின் பின்னால் இந்தியா இருந்திருப்பதற்கான வலுவான காரணங்கள் உண்டு. எனும் கோணத்தில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம்

இந்தியா இலங்கைக்கு மட்டுமல்ல தனது அயல் நாடுகளுக்கும் தெளிவானதொரு செய்தியை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ சீனாவுடன் நெருங்கிச் செயலாற்றி வந்த பின்னணியில்தான் மஹிந்தவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு தெரிவாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தை திரை மறைவிலிருந்து இந்தியா இயக்கியிருக்கலாம் என்றும் யதீந்திரா குறிப்பிட்டிருக்கிறார். உண்மை என்ன என்பது யசீந்திராவுக்கு அல்ல கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

* ரத்தின தேரரின் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தமிழர் கலாசாரம் மதுவால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது என ஜாதிக ஹெல உருமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கவலை வெளியிட்டிருக்கிறார். உண்¨மான். ரத்தின தேரர் பெளத்த ஐந்து கலாசார அமைப்பில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி சென்று அம்மகளுடன் அந்நியோன்யமாகப் பழகி வருகிறார்.

அவர் அங்கு கண்ணுற்ற காட்சிகளை வைத்தே இதனைக் கூறியிருக்க வேண்டும். வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விடியற் காலையில் பாதையோரங்களில் சிதறிக் கிடக்கும் பியர் வெற்றுக் கான்களை பார்த்தாலேயே தேரரின் கூற்று உண்மை என்பது புலனாகும். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.

* பிரதமர் ரணிலின் நம்பிக்கை தந்த பாராளுமன்ற உரைக்கு வரவேற்பு

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை நாட்டு மக்களிடையே ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகங்கள் எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என அச்சமின்றி நம்பிக்கை வைக்கலாம்.

அதே சபையின் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும் நம்பிக்கையுடன் தெரிவித்த கருத்துக்கள் இனித் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இன ஒற்றுமையை இனியும் எவரும் இடையில் புகுந்து குழப்பாது இருந்தால் அதுவே போதும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.