புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
சிலாவத்துறையில் இரு நாவல்கள் வெளியீட்டு விழா

சிலாவத்துறையில் இரு நாவல்கள் வெளியீட்டு விழா

முசலி இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரு நூல்களின் வெளியீட்டு விழா சிலாவத்துறை அ. மு. கா. பாடசாலை மண்டபத்தில் ஒன்றியத் தலைவர் அரபாத் முஹம்மட் காசிம் தலைமையில் நடைபெறுகிறது.

இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப. 2.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் அகத்தி முறிப்பு எம். இஸ்வர்தீன் எழுதிய “அணையாத அனல்கள்” (கவிதை நூல்), ஆசிரியர் எம்.எம். மஸ்தான் (தெளபீக்) எழுதிய “வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்- 1990” (ஆய்வு நூல்) ஆகிய இரு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலி பாவா பாரூக் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும், முசலிப் பிரதேச சபைத் தவிசாளர் தேசமான்ய டபிள்யூ. எம். எஹியான் விசேட அதிதியாகவும், வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், எச். எம். றயீஸ், வை. ஜவாஹிர், ஏ. அஸ்மின் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். எச். ஹஸ்புல்லா சமூக ஜோதி ஏம். ஏ. றபீக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தும் இவ்விழாவில் சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், சமூக சேவையாளர்கள், இலக்கி யவாதிகள் உட்பட முசலிப் பகுதி பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.