புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 

குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கும் வனராஜh கீழ் பிரிவு மக்கள

குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கும் வனராஜh கீழ் பிரிவு மக்கள

நீரூற்றுக்களின் பிறப்பிடமான மலையகத்தில் வாழும் மக்கள் தமது குடிநீரை பெற்றுக் கொள் வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அம்ப கமுவ பிரதேச சபைக்குட்பட்ட டிக் கோயா வனராஜா கீழ்ப்பிரிவில் வாழும் மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமத்திற்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடாத்து கின்றனர்.

லயன் குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டு அதே இடத்தில் மாடி வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேற்றப் பட்டனர். இந்நி

லையில் அங்கு இருந்த பழைய நீர்த்தாங்கியுடன் இணைந் ததாக புதிய நீர்த்தாங்கியொன்றும் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த மாடி வீட்டுத் திட்டத்தில் ஒரு பகுதிக்கு புதிய நீர் தாங்கியில் இருந்து நீர் கிடைக்கப் பெற்றதாகவும் ஏனைய பகுதிக்கு நீர் கிடைக்கப் பெறுவதில்லை என வும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தமது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பழைய நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் போதிய நீர் கிடைக்கப் பெறுவதில்லை.

மழைக் காலங்களில் இந்த நீர் தாங்கியில் இருந்து நீர் கிடைக்கப் பெற்றாலும் அது சேறு கலந்துள்ள துடன் அட்டைகளும் காணப் படுவதாக தெரிவிக்கின்றனர்.

சிலரின் வீட்டுத் தோட்டங்களில் உள்ள கிணறுகள் மூலம் நீரை பெற்றுக் கொள்வதாகவும் அதுவும் தமது தேவைக்கு போதுமான தாக இல்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக குடியிருப்பின் கீழ் பகுதியில் காணப்படும் நீரூற்றுக்களை தேடிச் சென்று ஓரளவு நீரைப்பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நீர்ப்பிரச்சினை காரண மாக சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக் கப்பட்டுள்ளனர். தமது தொழி லுக்கு செல்வதற்கு நீர் பிரச் சினை பெரும் இடையூராக உள்ளதாகவும் இதனால் தமது தொழில்களை சரியாக கவனிக்க முடியாத நிலையில் தமது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தமது பிள்ளைகள் பாடசாலைக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு முடியாதுள்ள தாகவும் உறவினர்களின் வருகை மற்றும் விசேட தேவைகளின் போது தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களுக் கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.