புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
தருணம் பார்த்து முஸ்லிம் காங்கிரஸ் மீதிருந்த தனது குரோத உணர்வை வெளிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

தருணம் பார்த்து முஸ்லிம் காங்கிரஸ் மீதிருந்த தனது குரோத உணர்வை வெளிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

முஸ்லிம் சமூகமொன்றின் தலைவர் என்ற வகையில் கடந்த செவ்வா ய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றின்போது அமைச் சர் ரவ+ப் ஹக்கீம் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கேள்வியொன்றை எழு ப்புவதற்கு முனைந்தபோதும்

சாபாநாயகர் சந்திம வீரக்கொடி குறிப் பிட்டார். இது பாராளுமன்ற சட்டம் தொடர் பான விடயம். அச்சந்தர்ப்பத்தை பயன்படுத் திக்கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் தருணம் பார்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதி ருந்த தனது குரோத உணர்வை கொப் பளித்திருக்கின்றார்.

பிரதிசாபாநயகர் அவ்வாறான கருத் தொன்றை முன்வைத்தவுடன் சபையில் எழு ந்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசி ங்க “ நீங்கள் எனது கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தானே! அமைச்சர் எழுப்ப வந்த பிரச்சினை என்னவென்பது புரிகிறது. பிரச் சினை இருப்பது உண்மை. ஆனால் இந்த விடயத்தை இங்கு தீர்க்க முடியாது. இதை நீங்கள் அமைச்சரவைக்குக் கொண்டு சென்று எழுப்பி தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியில்லாவிட்டால் அரசாங்க த்தை விட்டு வெளியேற வேண்டும்.

அதைவி டுத்து தற்போதிருக்கும் நிலையை எம்மால் மீற முடியாது என்பதுடன் உங்களை கட்சித் தலைவராக அங்கீகரிக்குமாறு கோரவும் முடி யாது” என பகிரங்கமாக கருத்துக்களை முன் வைத்திருந்தார். அத்தருணத்தில் பதிலளித்த மு.கா தலைவர் ஹக்கீம் உங்களுக்கு தேவை நான் அரசிலிருந்து வெளியேறுவது தானே எனக்”கூறி அவருடைய எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த எண்ணத்தை பொது மக்கள் அறியாத வகையில் சிலரின் துணை யுடன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கின் றது. எவ்வாறாயினும் முஸ்லிம் மக்கள் அது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை உண ருவதுடன் ரணில் விக்கிரமசிங்கவின் சுய ரூபத்தையும் புரிந்துகொள்வது அவசியமாகி ன்றது.

இதற்காக சற்றுப் பின்நோக்கிய பார்வையொன்றை செலுத்த வேண்டியிருக்கின்றது. மறைந்த மாபெருந் தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் தலைமையில் மு.கா, முன்னாள் ஜனா திபதி சந்திரிக்காவின் அரசில் பேரம்பேசும் சக்தியுடன் இருந்தது. அதன்போது 2000ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக தலைவர் அஷ்ரப் மறைவைத் தொடர்ந்து சில குழப்ப நிலை மைகளுக்குப் பின்னர் மீண்டும் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப் போதைய அரசியல் களநிலைமைக்கு அமைவாக மு.கா, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் போது சிறுபான்மை மக்களின் தாயகப் பிரதேசங்களையே அறிந்தி ராத ரணில் விக்கிரமசிங்க சம்மாந்து றைக்கு வருகைதந்து “மரத்தின் கீழ் யானை களமிறங்கியிருக்கின்றது என கூறியது மட்டுமல்ல, மரத்தின் கீழே யானை என்றும் இருக்கும்” எனவும் கூறினார்.

அதற்கமைவாக மு.காவும் தனது பெரும்பலத்தை நிரூபித்து ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் அடைந்த அதியுச்ச பத வியான பிரதமர் அரியாசனத்தில் அம ர்த்தியது. இருந்த போதும் மு.காவிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வதற்கு பதிலாக மு.காவை பிளவுபடு த்தி அதன் ஊடாக தனது அரசியலை முன்னெடுக்கலானார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தி ற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டமை மட்டு மல்லாது ஹரீஸ், அஸீஸ் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் பாரர்ளுமன்ற உறுப்பினர் ளை கட்சியை விட்டு வெளியேறச் செய்து எதிரணிக்கு பலம்சேர்த்துக்கொடுத்தார். இச் செயற்பாடு தான் உண்மையிலேயே முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்களை பிளவுபடுத்து வதற்காக போடப்பட்ட அத்திவாரம் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னை பிரதமர் ஆசனத்தில் அமர்த்திய கட்சிக்கே அவ்வாறான துரோகத்தை இழைத்தமையால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவிலி ருந்து மு.கா வெளியேறியது. முடிவு ஐ.தே.க படுதோல்வியடைந்ததுடன் மட்டுமல்லாது பாரா ளுமன்றத்தில் அவர்களின் பலமும் குறைந் தது. இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க தனது அனைத்து தவறுகளையும் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததைப் போன்று அனைத்து துரோகத் தனத்தையும் மறைத்து விட்டு மு.கா அமைச்சுப்பதவிக்காகச் சென்றுவிட்டது எனப் பிரசாரம் செய்தார்.

இருந்தபோதும் தன்வினை தன்னைச் சுடும் என்பது போல் அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர் தல் என அனைத்திலும் ரணில்விக்கிரமசிங்க வின் தலைமையும் விய+கங்களும் முற்றுமுழுதாக தோல்வியுற்றது மட்டுமன்றி வாக்குவங் கியும் சரியத்தொடங்கியது. ஈற்றில் வேறு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த புடம்போட்ட ரணில்விக்கிரசிங்கவின் கட்சிக்குள்ளேயே பிள வுகள் வெடித்தன. முக்கியமானவர்கள் கட்சி தாவினார்கள். தலைமையின் மீதான அதிருப் தியை பகிரங்கமாகவே தெரிவித்தனர். ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று அதிகாரத்தையும் இழ ந்து எதிர்கட்சி என்ற அங்கீகாரத்தையும் படிப் படியாக இழந்து வருகின்றது. இவற்றுக்கெல் லாம் காரணம் ரணில் விக்கிரமசிங்கவே. இந்த நபரால்தான் இன்று எதிர்க்கட்சி பலமில்லா நிலைமை ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாது கட்சி யின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழு ந்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.