புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 

நீலாம்பரி

நீலாம்பரி

முகில்வண்ணன்

(சிறுவர் நவீனம்)

அவை கடிக்க வேண்டும் என்பதில்லை. விடம் மேலில் விழுந்தாலே போதும். அவ்வாறான ஏழு இராச நாகங்கள் அந்த வைரத்தைப் பாதுகாக்கின்றன. அவற்றிடம் இருந்து வைரத்தை மீட்டு எடுப்பது சிரமமான காரியம்”

“அது மட்டுமல்ல.... அந்த வைரத்துக்குரிய பெண் அவளுடைய திருமண பந்தத்துக்காவே அதனைப் பாதுகாத்து வருகிறாள். அது அவளுடைய பரம்பரை சொத்து. அந்த வைரத்தை எடுக்க வருபவன் ஒரு இராசகுமாரனாக இருப்பான். அவனையே அவள் மணம் முடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.”

இங்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுவதை உணர்ந்து கொண்டான் வர்மன். இதற்கு முன் ஏற்பாடாகத் தான் புருஷிமா தன்னை மணம் முடித்ததாகக் கூறும்படி கூறியிருக்கிறாள் என்பது புரிந்தது. அரசர் இவற்றைக் கூறிவிட்டு எழுந்தார். வர்மனும் எழுந்து நின்று “அரசே நான் ஒரு மன்னனின் உயிரைப் பாதுகாக்க தங்களையே நம்பி வந்திருக்கிறேன். அவரை நம்பித்தான் அந்த நாடே இருக்கிறது. நீங்கள் தான் எப்படியும் உதவ வேண்டும்” என்றான். “அது பற்றித்தான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்று இங்கு தங்குங்கள். நான் சிந்தித்து ஒரு முடிவைச் சொல்கிறேன்” என்றார்.

“அரசே நான் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகவே இருக்கும். விரைவில் உதவினால் நன்றாக இருக்கும்”

“ஆமாம்.....ஆமாம்.....” என்றவாறு அவர் வெளியேறினார். அவர்களுக்கு மாளிகையில் ஒரு அறை வழங்கப்பட்டது. இருவருக்கும் சங்கடமாக இருந்த போதும் சமாளித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் காலை எழுந் துபுறப்பட்டு இருந்தார்கள். (தொடரும்...)

அப்போது அங்கே ஒரு தேவதை போன்ற பெண் தோன்றினாள்.

“இளவரசனுக்கு வணக்கம். என்னை ஏமாற்றி விட்டீர்கள்” என்றாள் கவலையுடன் வர்மனுக்கு கலக்கமாக இருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.