புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
இலங்கையின் வர்த்தகத்துறை வளர்ச்சி தொடர்பில் ரிசாட் புதுடில்லி மாநாட்டில் விபரிப்பு
50வது சார்க் வர்த்தக அமைச்சர்களின் கூட்டம்

இலங்கையின் வர்த்தகத்துறை வளர்ச்சி தொடர்பில் ரிசாட் புதுடில்லி மாநாட்டில் விபரிப்பு

ஐந்தாவது சார்க் வர்த்தகத் துறை அமைச்சர்களின் கூட்டம் அண்மையில் புதுடில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் இறுதி அமர்வுகளில் இலங்கையின் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தின் இறுதி நாளன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் அமைந்துள்ள கே.கே.பிர்லா கேட்போர் கூடத்தில் இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட சார்க் பிராந்தியத்தின் வர்த்தக அமைச்சர்கள் சந்தித்தனர்.

சார்க் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மேம்பாடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலில் உள்ள இடர்பாடுகள் குறித்து இவர்களுடன் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பேச்சு வார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொதுநலன் சார்ந்த விவகாரங்களில் கருத்தொற்றுமையை உருவாக்குவது இதன் மூலம் சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான அடிப்படையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை யும் இந்த பேச்சு வார்த்தையூடாக இந்த வர்த்தக தலை வர்கள் மத்தியில் ஏற்பட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இலங்கை வர்த்தக சார் உத்தியோக பூர்வ அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கொண்ட இலங்கை பிரதிநிதிகள் இந்த கான்கிளேவ் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தெற்காசிய நூற்றாண்டில் மேம்பாட்டினை நோக்கிய பிராந்திய ஒருங்கிணைப்பு கருப்பொருளில் ஐந்தாவது சார்க் வர்த்தக தலைவர்கள் கான்கிளேவ் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இறுதி அமர்வுகளின் போது சார்க் பிராந்திய பங்கேற்பாளர்கள் மத்தியில் விவாதங்கள் இடம்பெற்றதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் வர்த்தகம் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள், எப்படி வர்த்தகத்தினூடான வர்த்தகம் (கி2கி வர்த்தகம்), தொடர்பிலான விவகாரங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது குறித்த விடயங்கள் பேசப்பட்டன.

இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் பிரடரிக் நாமன் அறக்கட்டளையின் பிராந்திய சபை இணை ந்து சார்க் வர்த்தகத்துறை அமைச்சர்களின் கூட் டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. சார்க் அமைப்பின் பொது செயலாளர் அகமட் சலீம் உட்பட 300க்கும் மேற்பட்ட சார்க் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் உயர் வர்த்தக உத்தியோகபூர்வ அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகம், உல்லாசப் பயணத்துறை மற்றும் இன்னோரன்ன முதலீடுகள் தொடர்பில் கருத்துப்பரிமாறல்களும் இட ம்பெற்றன. குறிப்பாக இலங்கை - இந் திய உறவு இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கிவரும் பல் துறை சார் பங்களிப்புக்கள் காலத்தின் தேவையானது என்பதாலும், ஆசியாவின் மையமாக இலங்கை திகழ்வதால் இலங்கையுடனான வர்த்தக, கலாசார மேம்பாடுகள் தொடர்பிலும் இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை இந்தியாவின் கைத்தொழில் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்து இருதரப்பு வர்த்தகத்தின் அவசியம், தற்போதைய இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இலங்கையின் கைத்தொழில் துறையின் புதிய பாதையில் இந்திய வழங்கும் பங்களிப்புக்கள், சந்தையில் போட்டித் தன்மையினை உருவாக்கும் இலங்கையின் உற்பத்தி பொருட்களின் நம்பகத் தன்மை என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.