புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ரி.என்.ஏ. தயாராகவே உள்ளது

தனது காலத்தினுள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சம்பந்தன் ஆர்வம்

துரோகிகள் என மக்கள் பட்டம் சூட்டிவிடுவார்கள் எனும் பயத்தினாலேயே பின்னிற்பதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

3அருண் தம்பிமுத்து அதிரடித் தகவல்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதுடன், அதனூடாகத் தனது மக்களுக்குச் சேவையாற்றும் விருப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

                                                            விவரம்»

 

 

கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், க. பொ. த. உயர்தரத்தில் மூன்று ஏ சித்திபெற்று மருத்துவ பீடத்திற்குத் தெரிவான கல்லூரி மாணவி துளசி சர்வேஸ்வரனுக்கு விருது வழங்கிக் கெளரவித்த போது எடுத்த படம். (படம் : பாலா)

அரசியல் இருப்பை தக்கவைக்க உணர்வுகளை தூண்டும் சக்திகள்

இனங்கண்டு ஒதுக்க வேண்டும் - எஸ்.கே.கிருஷ்ணா

மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்ளும் சக்திகளை இனங்கண்டு அவர்களைத் தேர்தல்களில் ஒதுக்க வேண்டுமென நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணா வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை வசீகரிப்பதற்காக ஆவேசமான பேச்சுக்களை மேடைகளில் பேசி மக்களின் இன உணர்வு களுடன் விளையாடியவர்கள் மீண்டும் வாக்கு வேட்டைக்கு கிளம்பியுள்ளனர்.  இவர்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உணர்ச்சிகரமான பேச்சுக்கள் மக்களுக்கு ஒருபோதும் சோறு போடப் போவதில்லை. வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வியல் சூழல் வேறு. கொழும்பு மக்களின் வாழ்வியல் நிலை வேறு.

                                விவரம் »

நீதியரசர் ஸ்ரீயின் றுதிக் கிரியை

இன்று பொரளையில்

மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜாவின் இறுதிக் கிரியைகள் பொரளை கனத்தை இந்து மயானத்தில் இன்று 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாத காலமாக நோய்வாய்ப்பட்டு மருதா னையிலுள்ள சென்டர் தனியார் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்த ......

                                                            விவரம்»

வெளிநாட்டிற்கு செல்வதால் பலனில்லை:

நமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்ப்போம்

அழைப்பு விடுக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது ...

                                                           விவரம் »

தாமும் செய்யாது அடுத்தவரையும் தடுக்கும் செயல்:

முதலமைச்சர் விக்கியின் முயற்சிகளுக்கு இடையூறு

தனது பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் அரசியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயற்பாடுகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன்....

விவரம் »

           

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.