ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

ஜிம்னாஸ்டிக்: பாடசாலை முதல் தேசிய மட்டம் வரை விஸ்தரிக்க வேலைத்திட்டம்

ஜிம்னாஸ்டிக்: பாடசாலை முதல் தேசிய மட்டம் வரை விஸ்தரிக்க வேலைத்திட்டம்

இலங்கையில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை விஸ்தரிக்க உடனடியாக வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தேசிய ஜிம்னாஸ்டிக் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச பதக்கங்களை வெற்றிகொள்ளக்கூடிய விளையாட்டுக்களில் ஆசியாவை வெற்றிகொள்ளக்கூடிய முக்கிய விளையாட்டாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டை அடையாளம் கண்டுள்ளோம்.

ஆனாலும் இந்த விளையாட்டு கிராம, பாடசாலை மட்டங்களில் வளர்ச்சி காணவில்லை. யுத்தம் முடிந்தும் கூட வடகிழக்கு மாகாணங்களில் இந்த விளையாட்டு அபிவிருத்தி காணவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டு ஆலோசகரான ஜப்பானைச் சேர்ந்த டக்கனோரி டக்ஷாஷி நெறிப்படுத்திய ஜிம்னாஸ்டிக் உயர் சான்றிதழ் பாடநெறியைப் பின்பற்றிய 50 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

இலங்கையில் பத்தாயிரம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தொடர்ந்து தெரிவித்தார்.

ஜிம்னாஸ்டிக் சங்கத் தலைவர் நளின் பெர்னாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி