ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

விளையாட்டு வசதிகளின் மேம்பாட்டுக்கு 200 மில்லியன் ரூபா செலவு

விளையாட்டு வசதிகளின் மேம்பாட்டுக்கு 200 மில்லியன் ரூபா செலவு

யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை பொது விளையாட்டரங்குகளை மீள் நிர்மாணப்படுத்த 141 லட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பூர்வாங்க நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

விளையாட்டு அமைச்சு தேசிய விளையாட்டு கொள்கையின் கீழ் பிரதேச மட்டத்தில் இருந்து மாவட்ட மாகாண மட்டத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

விளையாட்டு மைதானங்களை மறுசீரமைக்கும் பணிகளோடு விளையாட்டு சமாஜங்களுக்கு விளையாட்டு பொருட்களும் அமைச்சரினால் வழங்கப்பட்டன.

சகல பாடசாலைகளுக்கும் 05 இலட்ச ரூபா மதிப்பீட்டின் பேரில் மறுசீரமைப்பதற்கு நிதி வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு வசதிகளை அதிகரிப்பதற்காக 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி