ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

பாடசாலை கிரிக்கெட் நடுவர்களின் தரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

பாடசாலை கிரிக்கெட் நடுவர்களின் தரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டின் அபிவிருத்திக்காக நடுவர்களின் தரத்தை உயர்த்தும் புதிய வேலைத் திட்டம் அமுலாகும்.

இனிமேல் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டுக்கு நடுவர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு நான்கு பிரதான சங்கங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

இதுபற்றி விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித் துள்ளார்.

பாடசாலை கிரிக்கெட் நடுவர்கள், பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு இடையில் நடுவர்களைத் தெரிவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் தலைமையில் விளையாட்டு அமைச்சில் விசேட மாநாடு நடைபெற்றது.

நடுவர்களின் அறிவு, திறமை, தொழில்தரம், ஆற்றல் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு நடுவர்கள் சங்க பிரதிநிதித்துவம் செய்யும் விசேட குழுவின் சிபார்சின் பேரில் நடுவர்களின் சேவையைப் பெற இணக்கம் காணப்பட்டது.

நடுவர் ஒருவரைப் பெறுவதென்றால் 48 மணித்தியாலயத்துக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நடுவர் பரீட்சை தேர்ச்சி கிரிக்கெட் நிறுவனத்தின் தரம் ஆகியவற்றுக்கு அமையாதவர்களுக்கு நடுவர்களாக பணியாற்ற முடியாது.

கிரிக்கெட் விளையாட்டின் தன்மை களை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட் நிறுவனம் மூலம் மேற்பார்வைப் பணி யும் எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்தப்படும்.

பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் டில்ஷான் த சில்வா உட்பட நடுவர் சங்கத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி