ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

சச்சினுக்கு முழு லீவு அனுமதி ராஜ் யசபாவுக்கு வர வேண்டியதில்லை

சச்சினுக்கு முழு லீவு அனுமதி ராஜ் யசபாவுக்கு வர வேண்டியதில்லை

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ராஜ் யசபாவுக்கே வருவதில்லை என்ற விமர் சனம் எழுந்த சில நாட் களில் தாம் இனி அவை நடவடிக்கை முழுவதும் அனைத்து கூட்டத் தொடரி லும் கலந்து கொள்ளாமல் இருக்க லீவு வழங்க வேண் டும் என்று விண்ணப்பித்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று சபை தலைவர் லீவு அனுமதி அளித்தார். தனக்கு மருத்துவ ரீதியான பிரச்சினை இருப் பாதாக தனது வேண்டுகோளில் கூறி யது ஏற்று கொள்ளப்பட்டது. சிறப்பு அந்தஸ்து கொண்ட இது போன்று எம்.பி.,க்கள் நடந்து கொள்வது சரிதானா என்ற விவாதமும் ஒரு புறம் துவங்கியிருக்கிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத் தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக் கும் வாக்கு பெறும் முயற்சி யாகவும் சில நட்சத்திரங்களுக்கு ராஜ் யசபா நியமன எம்.பி. பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் கிரிக்கெட்டில் இரு ந்து ஓய்வு பெற்ற சச்சினும் எம்.பி.பொறுப்பை பெற்றார்.

ஆனால் பதவி கிடைத்த நாள் முதல் சச்சின் அவை க்கு வராமல் இருந்து வந் தார். ஒரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசியல் ரீதியாக விமர்சனம் எழுந்தது. இத னையடுத்து சச்சின் முழு லீவு கேட்டு விண்ணப்பித்தார்.

இதனை அவைத் தலைவர் குரியன் அமீது அன்சாரி ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும் சச்சின் எம்.பி,யாக இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்; என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி