ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

உலக வர்த்தக அமைப்பு குறித்த மோடியின் கருத்துக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு

உலக வர்த்தக அமைப்பு குறித்த மோடியின் கருத்துக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு

உலக வர்த்தக அமைப்பு குறித்த மோடியின் கருத் துக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மாநிலங் களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட னர்.

உலக வர்த்தக அமைப்பின் சார்பில் வணிக நடை முறைகள் மேம்பாட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பது குறித்த பேச்சுக்கள் nஜனிவாவில் நடந்து வந்தன. உழவர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான இந்த ஒப்பந்தம் கையெழு த்தாவதை இந்தியா அதன் உறுதியான நிலைப் பாட்டால் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் 66 சதவீதத்திற் கும் கூடுதலான மக்களுக்கு உணவு மானியம் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே இந்தியா அதன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்தம் செய்யப் படுவதை தடுத்துவிட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏழை மக்களின் விருப்பத்தை பாதுகாக்கும் வகையில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா கடுமை யான நிலைப்பாட்டை தேர்வு செய்தது என்று பேசினார்.

மேலும் உணவுப் பாது காப்பு விவகாரத்தில், உலக வர்த்தக அமை ப்பிடம் முந்தைய ஐக் கிய முற்போக்குக் கூட் டணி அரசு சமரசம் செய்து கொண்டதாக மோடி தெரிவித்திருந் தார். இதற்கு காங் கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தை நேற்று மாநிலங்கள வையில் எழுப்பி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்டனர்.

இதனால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், காங்கிரஸ் கட்சியின் உறுப் பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை நண்பகல் 12 மணிவரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி