ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

கம்பன் விழா மூன்றாம் நாள்

கம்பன் விழா மூன்றாம் நாள்

கொழும்பு கம்பன் கழகம் ஏற்பாடு செய்து ள்ள கம்பன் விழாவில் மூன் றாம் நாள் இன்று 15ம் திகதி சனிக் கிழமை காலை 9.30 மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக ‘கம்பன் காவலர்’ புதுவைக் கம்பன் கழக செயலாளர் தி. முருகேசன் கலந்து கொள்கிறார். இன்றைய நிகழ்வுகள் காலை, மாலை நிகழ்வுகளாக நடைபெற உள்ளன.

கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில் மூன்றாம் நாள் காலை நிகழ்வுகள் 9.30 மணிக்கு

தொழிலதிபர் தி. துவாரகேஸ்வரன் தம்பதியரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகவுள்ளது. திருமதி ஹம்சனாந்தி தர்மபாலன் கடவுள் வாழ்த்து இசைப் பார்கள்.

கொழும்பு முத்தமிழ் மன்றத் தலைவர் ஆர். வைத்தமாநிதி தலைமையுரையையும், எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் தொடக்கவுரையையும் நிகழ்த்துவார்கள். புலவர் இரெ. சன்முகவடிவேல் தலைமையில் ‘தன்னேரில்லா தலைவனாய் இராமனை ஆக்கும் பண்புகளில் தலையாயது’ என்ற தலைப்பிலான இலக்கிய ஆணைக்கழு நிகழ்வு இடம்பெறும்.

இதில் ஊராண்மையே! என ந. விஜயசுந்தரமும், உலகநேசிப்பே! என ச. மார்க்கண்டுவும், ஏகபத்தினிவிரதமே என இரா. செல்வவடிவேலும், காருண்யமே என ரி. ரெங்கராஜாவும், இருவினை ணப்பே என ஸ்ரீ பிரசாந்தனும், அறநிமிர்வே என தி. திருநந்தகுமாரும், பணிவுடைமையே என வி. அசோக்குமாரனும், சகோதரத்துவமே! என த. இராமலிங்கமும் விவாதம் செய்ய உள்ளனர்.

மாலை 4.30 மணிக்கு பா. சரண்ராஜ் குழுவினரின் மங்கல இசையுடன் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வின் மங்கல விளக்கேற்றலினை ஐ. டி. எம். நிறுவுநர் வி. ஜனகன் தம்பதியினர் ஏற்றிவைப்பர். திருமதி ரா. தாரணியின் கடவுள் வாழ்த்து இடம்பெறும். தலைமையுரையினை செலான் வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர். நடராஜா ஆற்றுவார். தொடக்கவு ரையினை புதுவைக் கம்பன்கழகத் துணைத் தலைவர் வி. பி. சிவக்கொழுந்து நிகழ்த்துவார்.

சிறப்பு நிகழ்வாக ‘பூதங்கள் தொறும் உறைந்தது..” என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெறும். இக்கவியரங் கத்துக்கு, சிதம்பரப்பிள்ளை சிவக்குமார் தலைமை வகிக்கிறார். நிலமாகக் கம்பன் வந்தால்! என ச. முகுந்தனும், நீராக கம்பன் வந்தால்...! என ச. மணிமாறனும் நெருப்பாக கம்பன் வந்தால்....! என த. ஜெயசீலனும், காற்றாக கம்பன் வந்தால்....! என த. சிவசங்கரும், வானாக கம்பன் வந்தால்...! என ஸ்ரீ பிரசாந்தனும் கவிபாட உள்ளனர்.

பேராசிரியர் இரா. செல்வகணபதி தலைமையில் உரையரங்கம் இடம்பெறும். இதில் ‘பாரதியில் கம்பனைக் கண்டேன்” என்ற தலைப்பில் த. இராமலிங்கமும், ‘கம்பனில் பாரதியைக் கண்டேன்’ என்ற தலைப்பில் வி. அசோக்குமாரனும் உரையாற்றுவார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி