ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க வேண்டும்: பா.ஐ.கஎம்.பிக்கள் கடிதம்

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க வேண்டும்: பா.ஐ.கஎம்.பிக்கள் கடிதம்

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் ஏராளமான நிலங்களை வதேரா வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்தி வதேரா நில மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சி உதவியுடன் வருவாய் துறையில் குறுக்கிட்டு, நிலங்களை அவர் மிக, மிக குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதற்காக அரசு ஆவணங்களை திருத்தியதாகவும் ராபர்ட் வதேரா மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில பா. ஜ. க. எம்.பி.க்கள், அம்மாநில முதல் மந்திரி வசுந்தரராஜ சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா செய்த நிலமோசடி பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஆவணங்களில் வதேரா திருத்தம் செய்தது உண்மை என்று தெரிய வந்தால் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் எம்.பிக்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். பா. ஜ. க. எம்.பி.க்களின் இந்த திடீர் நடவடிக்கை சோனியாவுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர்களு க்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தன் மருமகன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் சோனியாவை கவலை கொள்ள செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் பா. ஜ. க. அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி