ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

தலைமுடியில் மேலாடை தயாரித்த சீனப் பெண்

தலைமுடியில் மேலாடை தயாரித்த சீனப் பெண்

சீனாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை, தன் தலைமுடியால் மேலாடை மற்றும் தொப்பியை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

சீனாவின், சாங்கங் மாகாணத்தைச் சேர்ந்த, ஷியாங் ரென்சியன், தன்னுடைய 34 வது வயது முதல், தலைவாரும்போது, சீப்பில் இருக்கும் முடிகளை தனித்தனி இழைகளாகப் பிரித்து சேமித்து வைத்தார். ஆசிரியப் பணியில் இருந்து ஓஓய்வு பெற்ற பின், தன்னிடமிரந்த முடிகளை சேர்த்து, 1.10 இலட்சம் இழைகளை உருவாக்கினார்.

இந்த இழைகளைக் கொண்டு, ஒரு மேலாடையையும் தன் கணவருக்காக ஒரு தொப்பியையும் தயாரிக்கும் பணியை, 2003ம் ஆண்டு முதல், 11 ஆண்டுகள் செலவிட்டு தயாரித்துள்ளார். இவர் தயாரித்துள்ள மேலாடை, 382 கிராம் எடையும், தொப்பி, 119 கிராம் எடையும் உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி