ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

ஓர் ஆண்டுக்கு மேல் பசிபிக் கடலில் தத்தளித்த மெக்ஸிகோ நாட்டவர் மீட்பு

ஓர் ஆண்டுக்கு மேல் பசிபிக் கடலில் தத்தளித்த மெக்ஸிகோ நாட்டவர் மீட்பு

பசுபிக் கடலில் ஓர் ஆண்டுக்கும் அதிக காலம் படகொன்றில் வழி தவறி சிக்கிக்கொண்ட மெக்சிகோ நாட்டவர் ஒருவர் மார்ஷல் தீவுகளில் கரையொதுங்கியுள்ளார். மோசமான நிலையில் மீட்கப்பட்ட அவர் தனது சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

மார்ஷல் தீவுகளின் தலைநகர் மஜுரோவுக்கு மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜோஸ் இவான் என்ற மேற்படி நபர், நான் மெசிக்கோவுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் தனது நண்பருடன் கண்ணாடியிழை படகில் பயணத்தை ஆரம்பித்ததாக இவான் குறிப்பிட்டார்.

இவரை இபோன் யடோல் என்ற தீவிலிருக்கும் மக்கள் கடந்த வியாழக்கிழமை மட்டனர். உடல் தெலிந்த நிலையில் கிழிந்த உள்ளாடை ஒன்றடன் மாத்திரம் இருந்த இவான், தான் இருந்த படகு சிறு கடற்பாறைத் தொகுதியை ஏட்டியதையடுத்தே கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.

சுமார் 5000 மைல்கள் வரை திக்கு தெரியாமல் பயணித்திருக்கும் இவர் வெறும் கையை பயன்படுத்தி மீன்கள், பறவைகள் மற்றும் ஆமைகளைப் பிடித்து உயிர்வாழ்ந்துள்ளார்.

தன்னுடன் வந்த நண்பன் பல மாதங்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக அவர் குறிப்பிட் டுள்ளார்.

எனினும் 24 அடிகொண்ட படகு எவ்வாறு சிக்கலில் மாட்டிக்கொண்டது என்றும் நண்பன் எவ்வாறு இறந்தார் என்பது பற்றியும் தகவல் வெளியாகவில்லை.

தமது குழுவொன்று குறித்த நபரை படகொன்றில் சென்று சந்தித்ததாக நோர்வே நாட்டு மானிடவியல் துறை மாணவன் ஒலா பில்ஸ்டான்ட் குறிப்பிட்டுள்ளார். 'அவரது படகை பார்த்த போது அதில் பறவை குஞ்சுகள், இறந்த ஆமை ஒன்று ஒருசில ஆமை ஓடுகள் இருந்தன. அவர் மோசமான உடல் நிலையில் இருக்கிறார் எனினும் உள ரீதியில் நல்ல நிலையில் இருக்கிறார்" என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ஷல் தீவுகளின் தலைநகருக்கு அழைத்துச் செல்ல ரோந்து படகொன்றில் ஏற்றப்பட்ட இவான், 'நான் மோசமாக உணர்கிறேன். நான் எங்கே இருக்கிறேன். எனக்கு என்ன ஆனது' என புலம்பிக் கொண்டிருந்தார்.

ஸ்பானிய மொழி மாத்திரமே பேசும் அவர் உள்ளூர் அதிகாரிகளுடன் படங்களை வரைந்து காட்டியே தனது நிலையை விளக்கி வருகிறார்.

கடந்த 2006ஆம் ஆண்டிலும் இதேபோன்றே மார்ஷல் தீவுகளில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டிருந்தனர். பசுபிக் கடலிங் தாம் 9 மாதங்கள் தத்தளித்திருந்ததாக அவர்கள் கூறி இருந்தனர் மழை நீர் கடற் பறவைகள் மற்றும் மீன்களை கொண்டே அவர்கள் உயிர்பிழைத்தனர்.

இந்நிலையில் தற்போது மீட்கப்பட்டிருக்கும் இவான், மழை பெய்யாத காலங்களில் ஆமை, மீன், பறவை இரத்தங்களை குடித்ததாக விபரித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி