ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ந பணப்பரிமாற்றத்துக்கான விசேட ஊக்குவிப்பு முயற்சியில் ஈடுபட்ட கொமர்'ல் வங்கி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ந பணப்பரிமாற்றத்துக்கான விசேட ஊக்குவிப்பு முயற்சியில் ஈடுபட்ட கொமர்'ல் வங்கி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் UAE  இடம்பெற்ற கண்கவர் வருட நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது கொமர்ஷல் வங்கி தனது லீ- பணப்பரிமாற்றத் திட்டத்துக்கான ஊக்குவிப்பிலும் ஈடுபட்டது. ‘ஸ்ரீலங்கா நைட்’ மற்றும் ‘ரோட் ஷோ’ எனும் பெயர்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து இந்த ஊக்குவிப்பில் வங்கி ஈடுபட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கீழ் வரும் இராச்சியங்களான துபாய், ஷர்ஜா, அபுதாபி, அஜ்மான் மற்றும் ரஸ் அல் கைமா ஆகியவற்றில் கொமர்ஷல் வங்கியின் பிரதான வர்த்தக பங்காளியான அல் அஹலியா எக்ஸ்சேன்ஜ் இன் கிளை நிறுவனங்கள் டிசம்பர் 8 முதல் 13 வரை இடம்பெற்ற ரோட்ஷோவில் பங்கேற்றன.

இலங்கையில் இருந்து இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற விசேடமாக இரண்டு கலைஞர்கள் UAE  அழைத்து வரப்பட்டனர். கொமர்ஷல் வங்கி அதிகாரிகளோடு இணைந்து அவர்கள் லீ- பணப்பரிமாற்ற வாடிக்கையாளர்களை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இவர்கள் வாடிக்கையாளர்களோடு நின்று படங்களையும் எடுத்துக் கொண்டனர். ஐந்து இராச்சியங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பல கிளைகளில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க லீ- வங்கிச் சேவை பிரதான முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ, UAE ி சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் பிரியரத்ன ஆகியோர் ரோட்ஷோ நிகழ்வில் வங்கியின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

‘அஹலியா ‘ஸ்ரீலங்கா நைட்” நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு UAE  ல் வங்கியின் லீ- பணப்பரிமாற்ற சேவையின் பிரபலத்துக்கு பங்களிப்புச் செய்தமைக்காக எக்ஸ்சேன்ஜ் இல்லங்களின் அலுவலக ஊழியர்களுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கி வங்கி கெளரவித்தது.

துபாயின் தேரா பகுதியில் உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலில் இந்த கண்கவர் நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் கொமர்ஷல் வங்கியின் முத்திரை பொதிக்கப்பட்ட கவர்ச்சிகரமான அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து பணத்தை அனுப்பும் மார்க்கங்களுள் இலங்கையில் கொமர்ஷல் வங்கி பிரதான இடம் பிடிக்கின்றது. இந்த விடயத்தில் வங்கி அதற்கே உரித்தான லீ- பணப்பரிமாற்ற தளம் உட்பட இன்னும் பல விரிவான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. லீ- பணப்பரிமாற்ற தளம் மிகவும் பாதுகாப்பான செலவு குறைந்த பணப்பரிமாற்ற வழிமுறையாகும்.

50க்கும் மேற்பட்ட நாடுகளில் முகவர்களைக் கொண்ட வலையமைப்பின் மூலம் இது செயற்படுகின்றது. வங்கியில் கணக்கொன்று இல்லாமலும் கூட வாடிக்கையாளர்கள் இந்த சேவை ஊடாக பணத்தை அனுப்பலாம். உலகம் முழுவதும் முக்கிய சந்தைகளில் இலங்கையர்கள் கணிசமாகத் தொழில் புரியும் இடங்களில் கொமர்ஷல் வங்கி தனது பிரத்தியேகமான வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளையும் கொண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி இலங்கையில் கொண்டுள்ள 235 கிளைகள் மற்றும் சேவை நிலையங்களுடனும் இலங்கையில் வங்கி ஒன்று கொண்டுள்ள தனிப்பெரும் பண விநியோக வலையமைப்பான 585 திஹிணி இயந்திரங்களுடனும் கூடிய செயற்பாடானது அதன் முக்கிய ஸ்திரத்தன்மையாக அமைந்துள்ளது. இவற்றின் ஊடாக பணத்தை அனுப்புகின்றவர்கள் பல்வேறு நம்மைகளை அனுபவிக்கின்றனர்.

50க்கும் மேற்பட்ட விடுமுறை கால வங்கி சேவை நிலையங்கள் மற்றும் சுப்பர்மார்க்கெட் நிலையங்கள், கட்டுநாயக்கவில் வாரம் ஏழு நாளும் 24 மணி நேரம் செயற்படும் நிலையம், பணத்தை அனுப்புவது தொடர்பாக உதவி வழங்கக் கூடிய அர்ப்பணத்துடன் கூடிய வாடிக்கையாளர் அழைப்பு சேவை, பணம் பெறப்பட்டதும் அது தொடர்பான குறுந்தகவல் அறிவுறுத்தல் வசதி, என்பன உட்பட பல வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.

இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியே உலகில் உள்ள தலைசிறந்த ஆயிரம் வங்கிகளுள் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக இடம் பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியும் ஆகும். ‘குளொபல் பினான்ஸ்’ சஞ்சிகையால் தொடர்ந்து 15 வருடங்களாக இலங்கையின் தலைசிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர “த பேங்கர்”, “பினான்ஸ் ஏஸியா”, “யூரோமணி” மற்றும் “டிரேட் பினான்ஸ்” சஞ்சிகைகளால் சிறந்த வங்கிக்கான பல விருதுகளையும் வென்றுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி