ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

கொமர்'ல் வங்கியின் ந பணப் பரிமாற்றம் ஆயிரம் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்

கொமர்'ல் வங்கியின் ந பணப் பரிமாற்றம் ஆயிரம் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்

ஒவ்வொரு பரிசுப் பொதியிலும் 20 அப்பியாச கொப்பிகள்

சுமார் ஆயிரம் மாணவர்கள் தமது புத்தாண்டு பாடசாலை ஆரம்பத்துக்கான அப்பியாசக் கொப்பிகளை கொமர்ஷல் வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வங்கியின் லீ பணப்பரிமாற்ற ஊக்குவிப்பு திட்டத்தின் கீழேயே இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கொமர்ஷல் வங்கியின் கேட்போர் கூடத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில் இவை வழங்கப்பட்டன. தூர இடங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு அண்மையில் உள்ள வங்கிக் கிளைகளில் இந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பரிசுப் பொதியிலும் பல்வேறு அளவுகளைக் கொண்ட 20 அப்பியாச கொப்பிகள் பொதி செய்யப்பட்டிருந்தன. இந்த பரிசுத் திட்டத்துக்கான ஊக்குவிப்பு காலம் நவம்பர் முதல் டிசம்பர் 2013 ஆகும். கொமர்ஷல் வங்கி லீ பணப் பரிமாற்ற சேவையூடாக பணத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் இதற்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றனர்.

வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கலுக்கான மீட்டல் இலக்கத்துடன் பரிசு தேவைப்படும் பிள்ளையின் பெயரை SMS வழியாக அனுப்ப வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டதாக வங்கி அறிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி