ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

டிக்கட் பரிசோதகர் பஸ்ஸில் ஏறியதும் நடத்துனர் தப்பியோட்டம்

டிக்கட் பரிசோதகர் பஸ்ஸில் ஏறியதும் நடத்துனர் தப்பியோட்டம்

பஸ் டிக்கட் பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறியதும், பஸ் நடத்துனர் டிக்கட்டுகள் பலவற்றை கிழித்து வாயில் போட்டுக் கொண்டு, டிக்கட் புத்தகத்தையும் எறிந்து விட்டு, தப்பியோடிய சம்பவம் மகியங்கனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மகியங்கனையிலிருந்து ரத்கிந்த என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த இ. போ. ச. பஸ்ஸை வழி மறித்து டிக்கட் பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறினர்.

இதைக் கண்ட பஸ் நடாத்துனர் தம்மிடமிருந்த டிக்கட் புத்தகத்தில் டிக்கட்டுக்கள் பலவற்றைக் கிழித்து வாயில் போட்டுக் கொண்டார். இதையடுத்து, அவர் தம்மிடமுள்ள டிக்கட் புத்தகத்தை எறிந்து விட்டு, பஸ்ஸை விட்டு தப்பியோடியுள்ளார்.

எறியப்பட்ட டிக்கட் புத்தகத்தை எடுத்து பரிசோதித்த டிக்கட் பரிசோதகர்கள், டிக்கட் புத்தகத்தில் நிதி மோசடி இடம் பெற்றிருப்பதும், பிரயாணிகள் பலருக்கு பிரயாண டிக்கட் கொடுக்காமல், அவர்களிடம் பணம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பதுளை மாவட்ட இ. போ. ச. டிப்போ முகாமைத்துவப் பணிப்பாளருக்கு அறிவித்த டிக்கட் பரிசோதகர்கள், மகியங்கனைப் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். தப்பியோடிய பஸ் நடாத்துனரை இடை நிறுத்தம் செய்த டிப்போ முகாமைத்துவப் பணிப்பா ளர், குறிப்பிட்ட நடாத்துனருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி