ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

கொரியமொழி பரீட்சை முடிவுகள் நவம்பர் 1 இல்

கொரியமொழி பரீட்சை முடிவுகள் நவம்பர் 1 இல்

11 ஆவது கொரிய மொழி பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பர் 01 ஆம் திகதி வெளியாகும்.

இப்பரீட்சைக்கு 20536 பேர் தோற்றினர்.

கொழும்பில் 06 நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்றது. இம்முறை பரீட்சையில் எந்தவித

மோசடியும் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட வில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொரிய அரசும், அந்நாட்டின் மனித வளத் திணைக்களமும், கொரிய தூதுவராலய அலுவலகமும் வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பரீட்சைத் திணைக்கள மேற்பார்வையில் பரீட்சை தொடர்பான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வருடம் இப் பரீட்சையில் தேறியவர்களுக்கு அடுத்த ஆண்டில் தொழில் வழங்கப்படுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார். (எப். எம்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி