ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

மாகம்புர துறைமுகம் 460 மில்லியன் வருமானம்

மாகம்புர துறைமுகம் 460 மில்லியன் வருமானம்

23000 வாகனங்கள் இறக்குமதி

ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் இதுவரை 460 மில்லியன் ரூபா வருமானம் பெறப் பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்துக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் 2012 ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் முதலாம் கட்டத்தில் 130 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப் பட்டது. ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் 55000 க்கும் அதிகமான வாகனங்கள் இறக்கப்பட்டதுடன் இந்த வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த துறைமுகத்தின் மூலம் 23000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் அளித்துக் கொண்டே துறைமுகத்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி