ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

களுத்துறை மாவட்டத்துக்கு தமிழ்மொழிமூல பட்டதாரிகள் 110 பேர் நியமனம்

களுத்துறை மாவட்டத்துக்கு தமிழ்மொழிமூல பட்டதாரிகள் 110 பேர் நியமனம்

மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திற்காக 110 தமிழ்மொழி மூலமான பட்டதாரி ஆசிரியர்களுக்காக நியமனம் வழங்கப்பட்டது.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் விசேட நடவடிக்கையின் பேரில் இந் நியமனம் வழங்கப்பட்டது.

இந் நியமனம் வழங்கும் நிகழ்வு கெவலக் டவுனில் உள்ளமேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் அலுவலகத்தில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.

கட்டாயமாக 5 வருடம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி முலமான பாடசாலைகளில் கடமையாற்றவேண்டும். கம்பஹா கொழும்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி