ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

உதைபந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு

உதைபந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு உதைபந்தாட்ட வீரர்களுக்கான சீருடை வழங்கிவைக்கு நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மர்ஹ¥ம் பெளஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதித்தலைவர் பiர் தலைமையில் ஹஜ்ஜூப் பெருநாள் தினம் (16) புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது கழகத்தின் சிரேஷ்ட வீரரும், தொழிலதிபருமான ஏ.எல். அமீர்அலி (ஜெலீஸ்) கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையினையும் வழங்கிவைத்தார்.

றெயின்போ எக்றோ சர்வதேச கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.ஏ. அkஸ் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான சீருடையினை வழங்கி வைத்ததுடன், கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையினை கழகத்தின் சிரேஷ்ட வீரரும் தொழிலதிபருமான ஏ.எல். அமீர்அலி (ஜெலீஸ்) வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மட்கான் மற்றும் சிரேஷ்ட வீரர்களான நிஜாமுடீன் அஸாத் ஜூனைடீன் பாயிஸ் இர்ஷாத் ராஜூடீன் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி